சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் http://consumerandroad.blogspot.com
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சுயதேவைக்கான வாகனம் ஓட்டிகளே உங்களுக்காக.....
உங்க வாகனத்தை முன் பரிசோதனை செய்யுங்க,
அடிப்படை பழுதுகளை கண்டுபிடித்து சரி செய்யுங்க,
சாலை விதிகளை மதியுங்க,
போக்குவரத்துச்சின்னங்களை மதியுங்க,
பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது
என்பதை மறவாதீங்க..
தற்போது சொந்தமாக கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. செல்ப் டிரைவிங் என்று சொல்லக்கூடிய தொழில் சாராத ஓட்டுநர்களாக சுயமாக தமது சொந்த காரை ஓட்டுபவர்களும் அதிகரித்துள்ளனர்.இவர்கள் வாகனம் ஓட்டும்போது பல்வேறு தவறுகளை செய்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
பாதுகாப்பாக ஓட்ட சில யோசனைகள்..
நீங்கள் கார் ஓட்டும்போது பதற்றமாக ஓட்டுவதாக மற்றவர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.வாகனம் ஓட்டும்போதுயாராவது குறை கூறினால் மறுக்காதீர்கள் மாறாக உங்களது தவறுகளை சிந்தியுங்கள்.நீங்கள் வாகனம் ஓட்டுவதை நீங்களே விமர்சனம் செய்யுங்கள்.சாலைச்சந்திப்புகளில் ஓட்டும்போதும்,கூட்ட நெரிசல்களில் ஓட்டும்போதும்,ஒரு வாகனத்தை பின் தொடரும்போதும்,ஒரு வாகனத்தை முந்தும்போதும்,சாலை வளைவுகளில் ஓட்டும்போதும்,வலதுசாலை அல்லது இடது சாலை திரும்பும்போதும்,நீங்கள் வாகனத்தை நகர்த்தி ஓட்டும்போதும்,பின்னோக்கி நகர்த்தும்போதும்,இரவு நேரங்களில் ஓட்டும்போதும்,மழைக்காலங்களில் ஓட்டும்போதும்,என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என தொடர்ந்து பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கும் நீங்கள் ஓட்டிச்செல்லும் வாகனத்திற்கும் உள்ள இடைவெளி தூரத்தை சோதியுங்கள்.அதாவது இரண்டு விநாடி தூரம் விதியை கற்றுக்கொள்ளுங்கள்.
பந்தயத்தில் ஓட்டுவது போல முன்னால் செல்லும் வாகனத்தை ஒட்டிக்கொண்டு சென்றால் அந்த வாகனம் திடீரென நிறுத்தும்போது மோதல்தான் நினைவில் வையுங்கள்.வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள்.மற்றவர்களுடன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்.இவ்விரண்டு செயல்களுமே உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு காரணமாகும்.முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும்போது MSMPSL தத்துவமுறையை கடைப்பிடியுங்கள்.முதலில் எதிரில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள்.எதிரில் எந்த வாகனமும் வரவில்லை என்றால் அல்லது எதிரில் வரும் வாகனம் குறிப்பிட்ட தூரத்தில் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் வருவதற்குள் முந்திவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே முந்துங்கள்.இல்லையென்றால் முந்துவதை தவிருங்கள்.முந்திச்செல்லும்போது மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.கட்டுப்பாடான வேகத்தில் முந்த வேண்டும்.பாதசாரிகள் கடக்கும் இடங்கள்,ரயில்வே கிராசிங்,பக்கச்சாலைகள்,பிரதான சாலைகள்,குறுக்குச்சாலைகள் போன்ற சாலை சந்திப்புகள்,மேம்பாலங்கள்,சுரங்கப்பாதைகள்,வளைவுச்சாலைகள்,செங்குத்துச்சாலைகள்,
போன்ற பார்வை மறைவுப்பகுதிகளில்,முந்துக்கூடாது.
எப்போதும் வலது பக்கமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும்.நமக்கு வலதுபக்கமாக போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.அதுபோல உங்களது வாகனத்தை முந்திச்செல்லும் வாகனங்களுக்கு முந்திச்செல்ல வசதியாக வழிகொடுத்து உங்களது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து விடுங்கள். அவசர வாகனங்கள்,மிக முக்கிய நபர்களின் வாகனங்கள்,ஆம்புலன்ஸ்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களை முந்தக்கூடாது.அதே சமயம் ஒதுங்கி வழிகொடுக்க வேண்டும்.
நான்குவழிச்சாலைகளில் இலகு ரக வாகனங்கள்,கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுமே இடது பக்கமாக முந்திச்செல்கிறார்கள்.அது மிகப்பெரிய தவறு மற்றும் தவிர்க்க வேண்டும்.இரவில் ஒற்றை விளக்கில் ஓட்டாதீர்கள்.இரவில் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசாதவாறு உங்களது வாகனத்தின் முகப்பு விளக்கின் ஒளியை தாழ்த்துங்கள்.திடீரென பிரேக் போட்டு நிறுத்துவதை தவிருங்கள்.சைகைகளை மற்றவர்கள் உணரும்படி அவகாசம் கொடுத்து காட்டுங்கள்...குறுகிய சாலைகள்,குறுகிய பாலங்கள்,வளைவுச்சாலைகள்,வாகனம் ஓடும் பாதைகள்,பேருந்து நிறுத்தங்கள்,சாலை சந்திப்புகள்,பாதசாரிகள் நடக்கும் இடங்கள்,பள்ளி மற்றும் மருத்துவமனைகள் முன்பாக நிறுத்த வேண்டாம்.பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி தடைகல் அல்லது கை பிரேக்,போன்ற தடை உறுதிக்கான வேலைகளை செய்யுங்கள்.
இடத்திற்கேற்ற வேகமே சிறப்பானது.வாகனத்திலுள்ள உச்ச வேகத்தில் ஓட்ட முயற்சிக்காதீர்.
No comments:
Post a Comment