Friday, 20 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி - ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)
                              சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி


                        SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பன்னிரண்டு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

              20.02.2015வெள்ளிக்கிழமை இன்று காலை 10.00மணியளவில் தாளவாடி ஒன்றியம்-ஆசனூர்  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ''சாலை பாதுகாப்பு  கல்வி'' விழிப்புரை  நடைபெற்றது.

 தலைமை ;திரு.S.P.பொன்னம்பலம் அவர்கள்,FIRE OFFICER,
                           தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் - ஆசனூர்.
    

வரவேற்புரை;திரு.திருநிறைச்செல்வன் அவர்கள், 
                              ஆசிரியர்GTRHSS - ASANUR.

நோக்கம்; திரு.W.ஃபிராங்க்ளின் அவர்கள்,
          இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் ,GTRHSS - ASANUR.

வழிகாட்டுரை; 
             திரு. கோவிந்தராஜன் அவர்கள்,
                         பேராசிரியர்,
 நஞ்சைய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி,
                    மேட்டுப்பாளையம்.

சாலை பாதுகாப்பு விழிப்புரை; 
               திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
                      செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
                          சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
          திரு,பரமேஸ்வரன் அவர்கள் தம் சிறப்புரையில், 
            சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,வாகன ஓட்டிகளாக பாதுகாப்பாக போக்குவரத்து செய்து நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.நம்முடைய பொருட்களுக்கு பாதுகாப்பதற்காக எத்தனையோ வழிமுறைகளை கையாள்கிறோம்.ஆனால் நம்முடைய உயிரின் பாதுகாப்பு பற்றி மட்டும் கவலைப்படுவதே இல்லை.என்பதை சுட்டிகாட்டி மன நலமும் உடல் நலமும் வாழ்க்கையின் பொதுவான சொத்து என கூறியபோது புகைத்தலின் தீங்கு மற்றும் மது,போதைப்பொருட்களின் தீங்குகளைப் பற்றி விழிப்புரை வழங்கினார்.
                 
 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம் காட்டியபோது....
புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம் காட்டியபோது..



நன்றியுரை; திரு.செல்வக்குமார் அவர்கள்,
                                 தலைமை ஆசிரியர் - 
        அரசு பழங்குடியினர்உண்டு உறைவிட  துவக்கப் பள்ளி -ஆசனூர்.     
          20.02.2015இன்று 
          ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிடப்பள்ளி மாணவர் ஒருவர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தபோது.....
               

No comments:

Post a Comment