Saturday, 31 May 2014

தாளவாடியில் இம்மானுவேல் கண் நோய் இலவச சிகிச்சை முகாம் -2014

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். 
           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.


    காலை எட்டு மணி முதல் மாலை மூன்று மணிவரை 254 நோயாளிகளுக்கு அயராது சிகிச்சையளித்த  மரியாதைக்குரிய கண் மருத்துவர் சாஜில் ஓமென் சக்கோ (SHAJIL OOMMEN CHACKO) அவர்களும் அவருக்கும் நோயாளிகளுக்கும் தமிழ் & கன்னட மொழி மாற்றி துணை புரிந்த மரியாதைக்குரிய D. குருபாதசாமி அவர்களும்.


       
   31-05-2014 சனிக்கிழமை  இன்று 
        ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 
ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக் குழு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் சார்பில்  தாளவாடியில் உள்ள அசிஸி பொது மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 3 மணி வரை நடந்த இம்முகாமிற்கு
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் தலைமை வகித்தார்.
திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர் முகாமை துவக்கி வைத்தார்.
  

 திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் -செய்தியாளர்,தாளவாடி ,திருS.ராஜேந்திரன் அவர்கள்,செயற்குழு உறுப்பினர் முன்னிலை வகித்தனர்.
இம்மானுவேல் கண் நோய் நிவாரணக் குழு மருத்துவர் திரு.ஷாஜில் ஓமென் சாக்கோ அவர்கள் தலைமையில் பதினைந்து மருத்துவக்குழுவினர் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.

               தாளவாடி மலைப்பகுதி சுற்றுவட்டாரங்களிலிருந்து 254 நோயாளிகள் கண் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர். 

                            97 நோயாளிகள் கண் புரை முற்றிய நிலையில் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.அனைவரையும் இரு பிரிவுகளாக பிரித்து முதல் பிரிவு 45 நோயாளிகளும் அவர்களில் இருவருக்கு இரு கண்களும் தெரியாத நிலையில் துணைக்கு 6 பேரும் ஆக  இன்று 31-05-2014 குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் மருத்துவமனையான G.M.மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
      அடுத்த பிரிவினர் 52 நோயாளிகள் வருகிற 03 - 06-2014 செவ்வாய்கிழமை அன்று அழைத்து செல்லப்பட்டனர்.

        கண்மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாட்டை 
முகாம் அமைப்பாளர் திரு.L.O.நடராஜன் அவர்கள் , நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு.K.லோகநாதன் (லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)  ஆகியோர் செய்து இருந்தனர்.
 கண் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் பயணித்த காட்சி.
கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீடு திரும்பிய அனைத்து நோயாளிகளுக்கும் மறுபரிசோதனை..........
                     எங்களது வேண்டுகோளினை ஏற்று கண் மருத்துவக்குழுவினர் வருகிற 27 -06-2014 வெள்ளிக்கிழமை அன்று தாளவாடி மலைப்பகுதிக்கே வருகை புரிந்து கண் அறுவை செய்துகொண்ட நோயாளிகளை மறு பரிசோதனை செய்ய உள்ளனர்.

Wednesday, 28 May 2014

தாளவாடியில் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவின் இலவச கண் சிகிச்சைக்கான பிரச்சாரம்-01

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        31ஆம் தேதி மே மாதம் 2014 சனிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை, தாளவாடி அசிஸி மருத்துவமனையில் கண் நோய்க்கான இலவச பரிசோதனை & சிகிச்சை முகாம்.........

         இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு ஒலிபெருக்கி பிரச்சார வாகனம்.நீண்ட காலமாக சிறப்பாக இலவசமாக சமூகப்பணி ஆற்றிவரும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண்நோய் நிவாரணக்குழுவினருக்கு சமூகம் சார்பாக நன்றி கூறி வணங்குகிறோம்.


  தாளவாடி கோடிபுரம் சிறு கடை உரிமையாளர்  திரு.வீரண்ணா அவர்கள் நோட்டீஸ்களை கடை முன்பு ஒட்டிவைத்து மக்களுக்கு சமூகப்பணி ஆற்றியகாட்சி. (அவரையும் வாழ்த்துவோம்.) 
            2014 மே மாதம் 31ஆம் தேதி தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடக்க இருப்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்க    28-05-2014 புதன்கிழமை இன்று  தாளவாடியில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் நடைபெற்றது.அப்போது தமிழிலும் கன்னடத்திலும் அச்சடிக்கப்பட்ட பிரச்சார நோட்டீஸ்களும் ஆறாயிரம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தமிழிலும் கன்னடத்திலும் பேனர் அச்சடித்து தாளவாடி பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.பிரச்சாரத்தில்

 கண் சிகிச்சை முகாம் அமைப்பாளர் திரு.நடராஜன் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,வாகன ஓட்டுநர் திரு.லட்சுமணன் அவர்களும் பிரச்சாரம் செய்தனர்.இருநூறு கிலோமீட்டர் தூரம் பிரச்சாரம் ஒரே நாளில் ஓய்வின்றி அனைத்து ஊர் உட்புறவீதிகளிலும் வாகனத்தை ஓட்டிச்சென்று மக்களை நேரில் சந்தித்து விளக்கமாகக்கூறி நோட்டீஸ்களும் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.வழிநெடுகிலும் தோட்டங்களில் கூலி வேலை செய்து கொண்டிருந்தவர்கள்,நூறுநாட்கள் வேலைத்திட்டத்தின்படி வேலை செய்துகொண்டிருந்தவர்கள்,பேருந்துகளில் பயணித்தவர்கள் என அனைவருக்கும் இலவச கண் சிகிச்சைக்கு வருகை தந்து கண் சம்பந்தப்பட்ட அனைத்து தொந்தரவுகளையும் பரிசோதித்து இலவசமாக பயனடையுமாறு அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி  பிரச்சாரம் செய்யப்பட்டது.
             வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் 28 - 5-2014 புதன்கிழமை  இன்று காலை 7-மணிக்கு தாளவாடியில் தொடங்கி ராமாபுரம், எல்லக்கட்டை, பாரதிபுரம், சேசன் நகர், தாளவாடி ஒசூர், ஜீவா போக்குவரத்து நகர், தொட்டகாஜனூர், தர்மாபுரம், சூசைபுரம், பீம்ராஜநாகர், சொத்தன்புரம், குருபுருண்டி,
 ஒங்கன்புரம், அருள்வாடி, மெட்டல்வாடி, மெட்டல்வாடி  ஒசூர், கரளவாடி, பாறையூர், மரியாபுரம், மல்லன்குழி, பட்டுப்பண்ணை, தமிழ்புரம், ஜோரே ஒசூர், மாதஹள்ளி, சிமிட்டஹள்ளி, பையனாபுரம், காமையன்புரம், பாளையம்,
 ஆனந்தபுரம், பனகஹள்ளி, சிங்கன்புரம், கொங்கள்ளி, பொதை,  மல்லையன்புரம்,
 பெலத்தூர், கெட்டவாடி, கிரிஜம்மாதோப்பு, குன்னன்புரம், ஜீரகஹள்ளி, தொட்டமுதுகரை,
 பசப்பன்தொட்டி, கல்மண்டிபுரம், சோளகர்தொட்டி,  எரகனஹள்ளி, கிருஷ்ணாபுரம்,
 திகினாரை, மல்குத்திபுரம், தொட்டி, இரிபுரம், அண்ணாநகர்,  தாளவாடி, மரூர், மகாராஜபுரம், சிக்கள்ளி,
 இக்கலூர், நெய்த்தாளபுரம், முதியனூர், மைராடா காந்திநகர், சீவகனஹள்ளி,
 தொட்டபுரம் அசிஸி மருத்துவமனை, தொட்டபுரம், தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, மாவநத்தம், காளிதிம்பம், ஆசனூர்
, திம்பம் 
         வரை பிரச்சாரம் செய்யப்பட்டது.

  தாளவாடி வட்டார அனைத்து கிறித்துவ சர்ச்களுக்கும் நோட்டீஸ்கள் வழங்கி அதன்படி அனைத்து சர்ச் களை சேர்ந்த திருமிகு.கிறிஸ்துவ பாதிரியார்கள் கடந்த 25 - 5 - 2014  ஞாயிற்றுகிழமை அன்றே தாளவாடி,திகினாரை,பனகஹள்ளி,தொட்டபுரம்,முதியனூர்,கெட்டவாடி,
சிமிட்டஹள்ளி,கும்டாபுரம்,சிக்கள்ளி, ஊர்களில் அமைந்து உள்ள சர்ச்களுக்கு வருகைபுரிந்த அனைத்து மக்களுக்கும் பிரச்சாரம் செய்யப்பட்டது. நெய்த்தாளபுரத்தில் அன்றைய தினம் நடந்த நாடக அரங்கத்திலும் கண் சிகிச்சை பற்றி அறிவித்து மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆசனூர் அரேபாளையம் மற்றும் அப்பகுதி வட்டார  மலைவாழ் மக்களுக்காக அரே பாளையம் பேருந்து நிலையத்தில்  பெட்டிக்கடை மற்றும் டீக்கடை வைத்து உள்ள திரு .மூர்த்தி அவர்களிடம் நூறு நோட்டீஸ்கள் வழங்கி அந்த வட்டார  மலைப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. அதேபோன்று  மாவள்ளம், தேவர் நத்தம்,குளியாடா மலைவாழ் மக்களுக்காக  கோட்டாடையில் மளிகை கடை வைத்துள்ள திரு.முத்தப்பா அவர்களிடமும்,திரு.பழனிச்சாமி அவர்களிடமும்  நூறு நோட்டீஸ்கள் வழங்கி அந்த வட்டார மலைப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.தாளவாடி வட்டார வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளிலும் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.தாளவாடி பேப்பர் ஏஜண்ட் மற்றும் பத்திரிக்கை நிருபர் திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்களும் அனைத்து பேப்பர்களிலும் பிரச்சார நோட்டீஸ்களை வைத்து அனுப்பியும்,எங்களுக்கு சாப்பாடு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து உதவினார்.
 (சமூகப்பணி ஆற்றிவரும் மேற்கண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.)

 அனைவரின் கவனத்திற்கு ;
                 
      (1) கன்னட நோட்டீஸ்கள்- 
                        கர்நாடகா மாநிலம், சாம்ராஜ நகரம் மாவட்டம், C.H.நகரத்தின் மையத்தில் உள்ள அதாவது  டபுள் ரோட்டில் எஸ்.பி.அலுவலகம் முன்பு அதாவது பஸ்வேஸ்வரா தியேட்டர் அருகிலுள்ள தேகுல ஆப்செட் முத்ரண  (Degula Offset Mudrana,Double Road,Chamrajanagar (Karnataka)
அச்சகத்திலும்,

(2)கன்னட பேனர் -
                Degula Offset Mudrana அச்சகத்திற்கு அருகிலுள்ள- பவன்குமார் டிஜிட்டல் பிரிண்டர்ஸ் ஃபிளெக்ஸ் பிரிண்டர்ஸ் (Pavankumar Digital Printers & Flex Printers ,Opp S.P.Office,Double Road,C.H.Nagar) அலுவலகத்திலும் 

(3)தமிழ் நோட்டீஸ்கள்-
          குன்னூர் மேட்டுப்பாளையத்திலுள்ள பாரத் ஆப்செட் பிரிண்டர்ஸ் அச்சகத்திலும்,
(4)தமிழ் விளம்பர பேனர்-
           குன்னூர் மேட்டுப்பாளையத்திலும் அச்சடிக்கப்பட்டது




Tuesday, 27 May 2014

தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்-2014

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  
தாளவாடி வட்டார மரியாதைக்குரிய பொதுமக்களே,
           அனைவருக்கும் வணக்கம்.
     

ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கமும்,குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு என்னும் அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் மற்றும் சாலை பாதுகாப்பு அமைப்பும் இணைந்து நம்ம தாளவாடியிலுள்ள அசிஸி மருத்துவமனையில் வரும் 2014 மே மாதம் 31ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை கண் நோய் இலவச பரிசோதனை மற்றும் இலவச சிகிச்சை அளிக்க உள்ளார்கள்.இலவசமாக நடக்க இருக்கும் கண் நோய் சிகிச்சை முகாமில் கண் புரை உண்டாகுதல்,கண்ணில் நீர் அழுத்தம்,கண்ணில் நீர்ப்பை  அடைப்பு,மாலைக்கண்,கிட்டப்பார்வை,தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகள் உட்பட எல்லா தொந்தரவுகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
 கண்ணில் புரை உண்டாகி இருந்தால் அன்றைய தினமே குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் மருத்துவமனைக்கு G.M.மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து சென்று இலவசமாக உணவு,தங்குமிடம்,மருத்துவ சிகிச்சை,அறுவை சிகிச்சை பேருந்து போக வர இலவச வசதி அனைத்தும் செய்து தரப்படும்.கண்ணிற்குள் இலவசமாக IOL லென்ஸ் பொருத்தப்படும்.அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் தங்களது ரேசன் கார்டு ஜெராக்ஸ் காப்பி அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் காப்பி எடுத்து வர வேண்டும்.தங்குவதற்கு தேவையான பொருட்களுடன் வரவேண்டும்.நம்ம தாளவாடி பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளாக இலவச சிகிச்சை செய்து வரும் குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு இந்த முறையும் தாளவாடிக்கு வருகை தருகிறது.எனவே உங்களுக்கோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ,உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ கண் சம்பந்தப்பட்ட தொந்தரவு ஏதாவது இருந்தால் மே மாதம் 31,2014 சனிக்கிழமை அன்று தாளவாடி அசிஸி மருத்துமனைக்கு காலை 8 மணிக்கு வருகை தந்து இலவசமாக பரிசோதனை செய்து இலவச சிகிச்சையும் பெற்று நிவாரணம் பெறுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் விவரங்களுக்கு http://consumerandroad.blogspot.com வலைப்பக்கத்தில் பார்வையிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                          

Friday, 23 May 2014

இலவச கண் சிகிச்சை முகாம்.நம்ம தாளவாடியில்

மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இலவச எண் சிகிச்சை முகாம் நம்ம தாளவாடியில்.....




   

Monday, 19 May 2014

இலவச கண் சிகிச்சை முகாம் - 2014

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.
       நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

                      கொண்டு செல்ல எதுவும் இல்லை!,
                        கொடுத்து செல்லுங்கள் கண்களை!!
  
         மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்,   

             குன்னூர் மேட்டுப்பாளையம்

  இம்மானுவேல் கண் நோய் நிவாரணக் குழு,

  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு 
                        இணைந்து நடத்தும்
 மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் .

  இடம் ; அஸிஸி ஆஸ்பத்திரி - தலமலை ரோடு,தாளவாடி.
        நாள்; 31 - 05 -2014 சனிக்கிழமை. 
    நேரம் ; காலை 8-00 மணி முதல் மதியம் 1 - 00 மணி வரை.

             கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சையும் அளிக்கப்படும்.அறுவை சிகிச்சை தேவை உள்ளவர்களுக்கு அன்றே மேட்டுப்பாளையம் G.M.கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படும்.
   தாளவாடி மற்றும் சுற்று வட்டாரப் பொதுமக்கள் அனைவரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 மேலும் விவரங்களுக்கு 
தாளவாடி பேருந்து நிலையத்தில் வைக்கப்படும் பேனர்களையும்,
 பிரச்சார நோட்டீஸ்களையும்  பார்வையிடவும்.

  உங்கள் தொடர்புக்கு மதிப்பு அளிப்போர்....
 (1) திரு.ஆனந்த நாராயணன் அவர்கள்,
            செய்தியாளர்,தாளவாடி பேருந்து நிலையம்,
 (2)  திரு.V.பாலமுருகன் அவர்கள்,பொருளாளர் ,
          (முத்திரைத்தாள் விற்பனையாளர்),
             தாளவாடி,
 (3) திரு. A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
( நடத்துநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்)
           தாளவாடி.
 (4)  திரு. சு.ராஜேந்திரன் அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
( நடத்துநர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்) 
         தாளவாடி.
 (5) திரு.S.K.சத்தியமூர்த்தி அவர்கள்,SKS கிரானைட்,
        தொட்டபுரம்,தாளவாடி.
 (6) திரு.N.மனோகரன் அவர்கள், எழுத்தர்,
        மாரியம்மன் கோவில் அருகில்,தாளவாடி.
 (7) திரு.மாதேஸ் அவர்கள்,தலைமை ஆசிரியர்,
         அரசு உயர்நிலைப் பள்ளி ,தாளவாடி.
 (8) திரு. ஆனந்தன் அவர்கள்,குருபுருண்டி,
 (9) திரு.V.வேணுகோபாலன்,அவர்கள்,அருள்வாடி,
 (10) திரு.D. குருபாதசாமி அவர்கள்,நடத்துநர்,
         மகாராஜபுரம்,தாளவாடி.
 (11)திரு.மூர்த்தி அவர்கள்,
        மூர்த்தி டீ ஸ்டால், தாளவாடி.
 (12) திரு.பக்திகுமார் அவர்கள், ஓட்டுநர் சங்கத் தலைவர் &
              அனைத்து ஓட்டுநர்கள்
            டெம்போ ஸ்டேண்ட்,தாளவாடி,
 (13)  தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்,
              தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
                தாளவாடி.