Tuesday, 21 May 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

            ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு'' 
            வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             தகவல் அறியும் உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவின் படி அடிப்படையான மனித உரிமையாகும்.மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கிடைக்கப்பெற்ற மாபெரும் ஆயுதம் ஆகும்.தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 நமக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் ஆகும்.
      
    தற்போது உள்ள தகவல் அறியும் சட்டத்திற்கான அடிப்படைக் காரணமானவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான (1)திருமிகு.அருணாராய் ,I.A.S.அவர்கள்,(2)திருமிகு.சங்கர்சிங்,அவர்கள் (3)திருமிகு.நிகில்தேவ் அவர்கள்(அமெரிக்காவில் மேலாண்மைப் பட்டப்படிப்பு பயின்று வந்த இவர் சமூக ஆர்வத்தின் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வந்து சமூகப்பணி ஆற்றியவர்) இந்த மூவரும் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ''தென்துங்கரி'' என்னும் குக்கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாத அல்லது மிகக்குறைந்த குக்கிராமமான ''தென்துங்கரி'' யில் மக்களோடு மக்களாக சிறு குடிசை போட்டு வாழ்ந்து அவர்களது வாழ்க்கைச்சூழலை அதாவது  கிராம மக்களின் கஷ்டங்களை உணர்ந்தனர்.அக்கிராமத்தில் மின்சாரம் இல்லை,குடிநீர் இல்லை,சரியான உணவு இல்லை,சாலை வசதி மற்றும் வாகன வசதி இல்லை,தொலைபேசி இல்லை,மருத்துவ வசதி இல்லை,கடும் வறட்சி நிலவியது,பண்படுத்தபடாத நிலம்,சமூகப்பாதுகாப்பு இல்லை,கல்வியறிவு மிகக்குறைவு,கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கித்தவிப்பு,கடன் மற்றும் வறுமை காரணமாக தற்கொலைகள் அதிகம் மக்கள் பிழைக்க வழி இல்லை என்ற நிலை. அதன் விளைவாக ''மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன்'' அதாவது ''விவசாய தொழிலாளர்கள் சங்கம்''என்ற சங்கத்தினை நிறுவி தங்களது உரிமைகளை கேட்க விழிப்படையச்செய்தனர்.மக்களும் -அரசு எதற்கு இருக்கிறது?அரசின் பொறுப்பு என்ன? கிராம பகுதிகளில் செயல்பாடு முடக்கம் ஏன்?குடிமக்கள் உரிமைகள் என்ன?கிராம நலத்திட்டங்கள் ஏன் கிடைப்பதில்லை?என பல கூட்டங்களைக்கூட்டி பொதுவாக விவாதித்தனர்.எல்லாக் கேள்விகளுக்கும் தங்களிடமே விடை இருப்பதை உணர்ந்தனர்.''ஜன் சன்வாய்'' என்னும் பொது விசாரணைகள நடத்த ''மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன்''அமைப்பு ஏற்பாடு செய்தது.இந்த பொது விசாரணைகள் மக்களை மேலும் விழிப்படையச்செய்தது.அரசு அதிகாரிகளை பொதுவிசாரணைகளில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். பொதுவிசாரணைகளை சந்திக்க அரசு அதிகாரிகளும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் படாதபாடு பட்டனர்.சங்கத்தின் வலிமை பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.இவ்வாறாக வலுப்பெற்ற சங்கத்தின் பொதுவிசாரணை என்னும் செயல்பாடு மாநில அளவில்  1994-ஆம் ஆண்டு நல்ல வரவேற்பினை பெற்றது.மக்களும் அரசின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.அரசு நிர்வாகத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இருந்த நிலை மாறி அரசு நிர்வாகத்தில் மக்கள் நேரிடையாகத் தலையிடும் உரிமையாக மாறியது.அனைத்து மட்டங்களிலும் மாநில அளவில் சங்கம் அங்கீகாரம் பெற்றது.ஆட்சி அதிகாரத்தை சுவைக்கப் பழகிவிட்ட அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் தாங்கள் செய்து வரும் முறைகேடுகளும்,சுரண்டல் நடவடிக்கைகளும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று அடக்கிவைத்த நிலை மாறி கவனமுடனும் பொறுப்புடனும் செயல்பட வைத்தது.

          தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டில் நமது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.11-05-2005 ஆம் ஆண்டில் மக்களவையிலும்,அடுத்த நாளான 12-05-2005 ஆம்ஆண்டில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது..15-ஜூன் மாதம்-2005 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது.21ஜூன் மாதம் 2005ஆம் ஆண்டில் அரசு பதிவிதழில் வெளியிடப்பட்டது. 12அக்டோபர் மாதம் 2005ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு இந்திய குடி மகனும் ,குடிமகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் 68-நாடுகளில் நடைமுறையில் உள்ளது.அகில உலக அளவில் சுவீடன் நாடுதான்1766-இல் முதன்முதலாக தகவல் அறியும் சட்டத்தை அமல்படுத்தியது.தென் ஆப்பிரிக்கா குடியரசில்தான் 2000-ஆவது ஆண்டில் அனைத்து தகவல்களையும் அரசுத்துறைகள் மட்டும் இன்றி தனியார் துறைகளும்,தனியார் அமைப்புகளும் மக்களுக்கு தகவல்களைக்கொடுக்க வேண்டிய பொறுப்புகளுக்குஆளாக்கப்பட்டன.

     தகவல் தொகுப்பு;- 
                                                           


               
 

Sunday, 19 May 2013

ஆலோசனை கூட்டம் -2013

மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம். 
              இன்று நமது ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு'' அமைப்பின் சார்பாக வருகிற ஜூன் மாதம் அன்று ஓட்டுனர் தினவிழா! பொதுமக்களே,உங்கள் குடும்ப திருவிழா!! என விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காரணம் இன்றைய அறிவியல் யுகத்தில் மோட்டார் வாகனம் இல்லாத வீடே இல்லை எனலாம்.அந்த அளவு அத்தியாவசியமாகிவிட்டது.தனிஅந்தஸ்து என்ற நிலை ஆகிவிட்டது.அவ்வாறு வீட்டிற்கு ஒரு வாகனம் அது இரு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி,நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும் சரி.ஏதாவது ஒரு வாகனம் இல்லத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.அப்படியானால் குடும்பத்தில் குறைந்த பட்சமாக ஒருவராவது வாகனம் ஓட்டும் நிலையில் உள்ளனர்.ஓட்டுநர் உரிமம் பெற்று உள்ளனர்.அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாமல் நன்கு ஓட்டும் நிலையில் அதாவது வாகன ஓட்டுநர்களாக உள்ளனர்.அதனால்தான் குடும்பத்தின் திருவிழா! என்று குறிப்பிட்டு உள்ளோம்.மீண்டும் சந்திப்போம்.

Wednesday, 1 May 2013

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரிகள் விவரம்.


 மரியாதைக்குரிய நண்பர்களே,வணக்கம்.
   

  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

  இந்த பதிவில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் முகவரிகள் பற்றி காண்போம்.
 (1)  தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
      சென்னை தெற்கு,
       எண்.212,ஆர்.கே.மட் ரோடு,
        மூன்றாவது தளம் - மைலாப்பூர்,
        சென்னை - 600004.
       தொலைபேசி எண்;- (044) 24938697.

(2) தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
      சென்னை தெற்கு,
       எண்.212,ஆர்.கே.மட் ரோடு,
  மூன்றாவது தளம் - மைலாப்பூர்,
        சென்னை - 600004.
       தொலைபேசி எண்;- (044) 24952458.
(3)  தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,
புனித மேரி காம்ப்ளக்ஸ் (St.Mary's Complex)
  புரோமினாட்(Prominade)
திருச்சி -
திருச்சி மாவட்டம்
தொலைபேசி எண்:-(0431) 2461481.



 தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,



தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,


 தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,

 தலைவர்,
    மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,





(4) 

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி


 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.
     

  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு -  வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி இங்கு காண்போம்.
      தலைவர்,
 தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
எண்,212,ஆர்.கே.மட் ரோடு,
மூன்றாவது தளம்,
 மைலாப்பூர்,
சென்னை - 600004,
தொலைபேசி எண்;- (044) 24618900
                                                        


           

தேசிய குறைதீர் ஆணையத்தின் முகவரி



  மரியாதைக்குரிய நண்பர்களே,
         வணக்கம்.

  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
   இங்கு தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முகவரி காண்போம்.

       தலைவர்,

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
5-வது தளம், 'A'விங்,மற்றும் 7-வது தளம், 'B'விங்,
  ஜன்மத் பவன்,
 ஜன்மத்,
   புதுதில்லி - 110001,
 தொலை நிழலச்சு ( FAX) எண்;-(011) 23712456.
தொலைபேசி எண்கள்;-
 (OFFICE).(011) 23712109, 
                    (011) 23712459, 
                     (011)23389248.


            

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

 மரியாதைக்குரிய நண்பர்களே,
                                           வணக்கம். 

                               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்  சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                              தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Dispute Redressal  Commission)    இதனை சுருக்கமாக தேசிய ஆணையம்(National Commission) என்று கூறுவது உண்டு.
                           தேசிய ஆணையத்தில் தலைவராக இடம்பெறுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உச்சநீதிபதியாக இருந்த ஒருவர் ஆக இருக்க வேண்டும்.இவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் இப்பிரிவின்கீழ் நியமிக்கப்படும் எந்த ஒரு நியமனமும் இந்தியாவின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து அதன்பிறகே செய்யப்படுதல் வேண்டும்.
                                          உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக க் கொண்டதும்,நான்கிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்கள் கீழ்கண்ட தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.குறைந்த பட்ச வயது 35 வருடங்கள் ஆகும்.
                       அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் பத்தாண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமையையும்,நேர்மையையும் மற்றும் தகுநிலையையும் பெற்று இருக்க வேண்டும். 
                   ஆனால் உறுப்பினர்களில்ஐம்பது சதத்திற்கும் மிகாதவர்கள் நீதிமன்ற பின்னணி (Judicial Back ground) கொண்டவர்களாக இருக்க வேண்டும்.