Sunday, 24 March 2013

CONSUMER WELFARE AND ROAD SAFETY ORGANISATION-TAMIL NADU

  மரியாதைக்குரிய நண்பர்களே,
                                        வணக்கம்.

 நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
          உலக நுகர்வோர் தினவிழா - 15-03-2013 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05-00 மணிக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (N.H.209)அமைந்துள்ள லோகு கனரக ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி அலுவலகத்தில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய நுகர்வோர் தினவிழா கொண்டாடப்பட்டன.அச்சமயம் மூன்றாவது விழாவாக   ''நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்'' என்ற மாநில அளவிலான புதிய சமூக சேவை விழிப்புணர்வு அமைப்பு உருவாக்கப்பட்டு நுக்வோர் நலனுடன் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வும் அனுசரிக்கப்பட்டது.


   மரியாதைக்குரிய நண்பர்களே,
                               வணக்கம். 15-03-2013 இன்று
     உலக முக்கிய தினங்களில் ஒன்றான ''உலக நுகர்வோர் தினவிழா'' ஆகும்.இன்றைய தினத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலத்தில் சமூக நலனுக்கான பொதுச் சேவை அமைப்பு  இனிய உதயமாகி உள்ளது.அது பற்றிய விவரம் காண்க.






 
                சத்தியில் முப்பெரும் விழா.
     சத்தியமங்கலத்தில்15-03-2013 அன்று உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தேசிய தினவிழா மற்றும் சமூக சேவைக்கான புதிய அமைப்பு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
     சத்தியமங்கலம் லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் ‘’நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு’’ என்ற பெயரில் புதிய சமூக சேவை அமைப்பு உருவாக்கப்பட்டது.

                              விழாவிற்கு 
            திரு.A.A. இராமசாமி அவர்கள் தலைமை வகித்தார்.       
           திரு,K. லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
           திரு. V.ராஜன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். 
           திரு. C. பரமேஸ்வரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 
           திரு.V. பாலமுருகன்-தாளவாடி அவர்கள் நன்றி கூறினார்.

   நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு என்ற புதிய சமூக சேவை அமைப்பிற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
     இந்த இயக்கம் ‘வாழு வாழ விடு’ என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி பொதுநலனுக்காக செயல்படும்.
 மேலும்,பொது மக்களுக்கு
      (1) நுகர்வோர் கல்வி கொடுப்பதற்காக, சட்ட விழிப்புணர்வு கொடுப்பது, நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கு , பயிலரங்கம் நடத்துவது.
      (2) சாலைப்பாதுகாப்புக் கல்வி கொடுப்பதற்காக,ஓட்டுநர் தினவிழா,பயணிகள் தினவிழா,பாதசாரிகள் தினவிழா,நடத்துவது.முதலுதவிப் பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை & சிகிச்சை முகாம்.மற்றும் மன அழுத்தம் போக்க யோகா வகுப்புகள் ஆகியன இலவசமாக நடத்துவது.
    (3)இளைய சமுதாய நலனுக்காக கலாச்சாரச் சீர்கேடு,மது போதையின் தீமைகள்,மற்றும் நமது பண்பாடும் குடும்ப உறவும் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது.
    (4) மலைப்பகுதி மக்களுக்காக சமூக முன்னேற்றத்திற்கான விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு,உயர் கல்விக்கான விழிப்புணர்வு கொடுப்பது..
  (5) மக்கள் நலனுக்காக நடத்தப்படும் அரசுத்துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் இணைந்து செயல்படுவது.
        போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  விழா ஏற்பாட்டினை திரு. S.ரவி கடம்பூர் மலை, மற்றும் தனபால் – தனம் மொபைல் ஆட்டோ, சத்தியமங்கலம் ஆகியோர் செய்து இருந்தனர்.
          நிர்வாகிகள் பட்டியல் விவரம் காண்க.

            ++++++++++++++++++++++++++++
  நுகர்வோர் நலன் மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்கம்.-
                     தமிழ்நாடு.

   
     DATE;- 15-03-2013 FRI DAY. 05-00P.M.

       
         நிர்வாகிகள் பட்டியல் விவரம்;-

தலைவர்- திரு.A.A. இராமசாமி அவர்கள்,

             ஸ்ரீகணபதி அரிசி மண்டி -சத்தியமங்கலம்.

துணைத் தலைவர்- திரு.S. ரவி அவர்கள்,

                               கடம்பூர் மலை.

செயலாளர் – திரு. C.பரமேஸ்வரன் அவர்கள் -சத்தியமங்கலம்.

துணைச் செயலாளர் – திரு.V. ராஜன் அவர்கள் -காசிபாளையம்.(கோபி)

பொருளாளர் – திரு. V.பாலமுருகன் அவர்கள்,

                 முத்திரைத்தாள் விற்பனையாளர் -தாளவாடி.

ஒருங்கிணைப்பாளர் – திரு.K. லோகநாதன் அவர்கள்,

                    லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி,

                     209 தேசிய நெடுஞ்சாலை- சத்தியமங்கலம்.

தகவல் தொடர்பு ஆலோசகர் – திரு. வேலுச்சாமி அவர்கள்,

                          செய்தியாளர்- சத்தியமங்கலம்.

செயற்குழு உறுப்பினர்கள்.

திரு. தனபால் அவர்கள்,

        தனம் மொபைல் ஆட்டோ.- சத்தியமங்கலம்.

திரு. A.P.ராஜூ அவர்கள், தாளவாடி

திரு.A.D. பிரபு காந்த் அவர்கள்,

     ஸ்ரீவாசவி தங்க மாளிகை- சத்தியமங்கலம்.

திரு. K.A.B.சதீஷ்குமார் அவர்கள்,

     கிருஷ்ணா கல்யாண் ஸ்டோர்ஸ்-,சத்தியமங்கலம்.

திரு.மனோஜ் பாண்டியன் அவர்கள்,

            செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. சிவக்குமார் அவர்கள்,

      செய்தியாளர் -சத்தியமங்கலம்.

திரு. S.பரமேஸ்வரன் அவர்கள்,

       எல்.ஐ.சி.முகவர்,- கோபி செட்டிபாளையம்.
 
    திரு.P.முத்துக்குமார் அவர்கள் 
                 (SCM TEXTILES) காசிபாளையம். 
 
இன்னும் பல்வேறு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு பல செய்திகள் பதிவிடப்படும்.
               நன்றிங்க. 
 என சமூக சேவையில் என்றும் அர்ப்பணிப்புடன் அன்பன் பரமேஸ் டிரைவர் என்னும் C.பரமேஸ்வரன்-அரசு போக்குவரத்துக்கழகம் - தாளவாடி.
                    
பதிவேற்றம்;- 
          திரு. C.பரமேஸ்வரன் அவர்கள், செயலாளர்- 
       நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம்-
                       தமிழ்நாடு.