Tuesday, 30 April 2013

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
              நுகர்வோர் நலன் மற்றும் சாலை பாதுகாப்பு இயக்கம் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

               மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் (State consumer   Disputes Redressal Commission)  இதனை மாநில ஆணையம் (State Commission) என்றும் கூறலாம்.
 மாநில ஆணையத்தின் அமைப்பு;-
              உயர்நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உயர்நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆணையத்தின் தலைவர் ஆவார்.இவரை மாநில அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் உயர்மன்ற தலைமைநீதிபதியைக் கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும்.
  உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக கொண்டதும் இரண்டிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவர்கள் குறைந்தபட்ச வயது 35ஆக இருக்க வேண்டும்.இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.அதுவும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்று இருக்க வேண்டும்.
                 அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம்,அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமை,நேர்மை மற்றும் தகுநிலை உடையவர்களாக இருக்க வேண்டும்.


          

No comments:

Post a Comment