சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம் http://consumerandroad.blogspot.com
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
சாலை பாதுகாப்பு வாசகங்கள்
(1)தலைக்கவசம்! உயிர்க்கவசம்!!
(2)ஹெல்மெட் அணிவது பாதுகாப்பு! இதுவே உனது உயிர்க்காப்பு!!
(3)தலைக்கவசம் அணிவீர்! உயிரிழப்பைத் தவிர்ப்பீர்!!
(4)உரிமம் வாங்க எட்டுப் போடு! உயிரைக்காக்க ஹெல்மெட் போடு!!
(5)சாலையில் அலைபேசி! ஆபத்தாகும் நீ யோசி!!
(6)சாலையில் போதை! மரணத்தின் பாதை!!
(7)போதையில் பயணம்! பாதையில் மரணம்!!
(8)சேமிக்க நினைத்தது சில நொடிகள்! சேதமடைந்தது பல உயிர்கள்!!
(9)மிதமான வாகனப் பயணம்! மீதமாகும் வாழ்க்கைப் பயணம்!!
(10)சாலையில் முந்தாதே! வாழ்க்கையில் முந்து!!
(11)இரு சக்கர வாகனம்,இருவர் செல்ல மட்டுமே!!
(12)அதிக பாரம்! ஆபத்தில் முடியும்!!
(13)அதிக சுமை ஏற்றாதீர்! ஆபத்தில் சிக்கித் தவிக்காதீர்!!
(14)படியில் பயணம்!நொடியில் மரணம்!!
(15)ஓடும் பேருந்தில் ஏறாதே! உயிரைப்போக்கிடும் மறவாதே!!
(16)ஓடும் பேருந்தில் இறங்காதே! உயிரைப் பணயம் வைக்காதே!!
(17)சாலை ஞானம் வளர்ப்போம்! சாலை விபத்தைத்தடுப்போம்!!
(18)சீட் பெல்ட் அணிந்தால் பாதுகாப்பு! இதுவே பயணத்தின் உயிர்காப்பு!!
(19)வளைவில் முந்தாதே!வாழ்க்கையை தொலைக்காதே!!
(20)மஞ்சள் கோட்டைத் தாண்டாதே! மரண எல்லையை தொடாதே!!
(21)வாகனத்தில் வரும் புகை! வாழ்க்கைக்கு பெரும் பகை!!
(22)அதிக சப்தம் எழுப்பாதே!மானிட ஆயுளை குறைக்காதே!!
(23)மருத்துவமனை,பள்ளி,கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே!!
(24)சாலை விதிகளை மதிப்போம்!
விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!!
No comments:
Post a Comment