Monday, 2 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை


        SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (ஐந்து)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
ASHA KENDRA-3704 SOOSAIPURAM (THALAVADI) & CHILD FUND INDIA     
    சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை-2015


 02.02.2015திங்கட்கிழமை இன்று காலை 10.30மணிக்கு


  தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட சூசைபுரம் CCF என்னும்
 'ஆஷாகேந்திரா சமூக நல அமைப்பு' உறுப்பினர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நடத்தப்பட்டது.அதன் புகைப்படத்தொகுப்பு தங்களது பார்வைக்காக.....

 விழிப்புணர்வு விழா துவக்கமாக இறைவணக்கம் பாடியபோது........
 சாலையின் பாகங்கள் மற்றும் வரைகோடுகள் பற்றிய விளக்கப்படம்...
         திரு.C.பரமேஸ்வரன்,
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அமைப்பின் செயலாளர் அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புரையில்
               சாலை பாதுகாப்பு சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு  என்பதை உணர்ந்து சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்யும் நாம்தான் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். ஆனால் நமது சாலை விதிகளை, போக்குவரத்துச்சின்னங்களை, சாலையின் தன்மைகளை, வாகனங்களின் இயக்க விதிகளை,வாகனம் 
ஓட்டும் முறைகளை,தெரிந்துகொள்ளாமலும்,போக்குவரத்துச் சட்டங்களை மதியாமையாலும்,அறியாமையாலும்,மீறுவதாலும் விபத்து ஏற்பட்டு கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு வருமான இழப்புகளுடன் பல்வேறு வேதனைகளையும் அனுபவித்து,மனநிம்மதியையும் இழந்து  எதிர்காலத்தையே வீணடித்துவிடுகிறோம்.விபத்து ஆய்வாளர்கள் கருத்துப்படி வாகன ஓட்டிகளால் 80சதவீதமும்,மோட்டார் வாகனத்தால் 10சதவீதமும்,பிற வகைகளால்10 சதவீதமும் விபத்துக்கு காரணம் என்கின்றனர்.எனவே சாலையில் கவனமாக பயணித்து நம்மையும் காத்து மற்றவர்களையும் பாதுகாப்பது நமது பொறுப்பும்,கடமையும் ஆகும் என்று விழிப்புரை வழங்கியபோது பாதசாரிகளாக போக்குவரத்து செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும்,பாதுகாப்பு முறைகளையும் விளக்கினார்.
      திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் விழிப்புரையில், சாலையின் பாகங்கள் மற்றும் வரைகொடுகள் பற்றியும், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையில் பயணிப்பது பற்றியும்,சாலையை கடக்கும்போது கவனத்தின் பாதுகாப்பு பற்றியும்,பயணிகளாக பேருந்து,ஆட்டோ,வேன் என பயணிகளுக்கான வாகனத்தில் பாதுகாப்பாக பயணிப்பது பற்றியும் விளக்கினார்.

  திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் கருத்துரையில்,
              வாகனம் பற்றிய அடிப்படை அறிவு தெரிந்து வைப்பது பற்றியும்,இயக்கவிதிகள் பற்றியும்,வேகமும்,அதற்கான காலமும் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
         திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் விழிப்புரையில்,
                 அனைவருக்கும் பொதுவான சொத்து உடல் நலமும், மன நலமும் ஆகும் என்று கூறியபோது  புகை பிடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படையும்,மூளை செயலிழப்பு ஏற்பட்டு மன நோயாளி ஆகும் நிலை ஏற்படும்.புற்றுநோய்,இதய நோய்,மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் என்றபோது புகைத்தலின் தீங்கு பற்றி செயல்விளக்கம் காட்டிய காட்சி.........

                புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்,புகையிலை,போதைப்பாக்கு போன்ற போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றி விரிவுரை செய்தபோது புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல்விளக்கம் காட்டி விழிப்புணர்வு கொடுத்தார்.
 நிறைவாக அனைவருக்கும் நன்றி கூற சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கல்வியுரை நிறைவு பெற்றது.