மரியாதைக்குரிய உறுப்பினர்களே,வணக்கம்.
நமது சங்கம் துவக்க விழா நடத்தும் முன்னரே தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.(கழிவு நீர் கலந்து வருகிறது) நேரில் தகவல் கொடுத்தும்,செயல் அலுவலர் அவர்களுக்கு தொலைபேசி வழி புகார் செய்தும் பலன் இன்றுவரை இல்லை.அனுப்பிய விண்ணப்பத்தின் சாரம் இங்கு காண்க.தங்களது விமர்சனங்களைத் தருக.
தகவல் பெறும் உரிமைச்சட்ட விண்ணப்பம்.
அனுப்புநர்;- C.பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்,
தமிழ்நாடு. (பதிவு எண்;-26/2013),
பெறுநர்;- பொது தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005,
பேரூராட்சி அலுவலகம்,
அரியப்பம்பாளையம் பேரூராட்சி-638402.
ஐயா,
பொருள்;-தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 ன் கீழ் தகவல் கேட்பது சம்பந்தமாக.
கேள்வி எண்;-
(1)தகவல் பெறும் உரிமை (Right To Informqtion) என்பது வெறுமனே தகவலைக் கேட்டுப் பெறுவது மட்டுமா? அல்லது அவற்றை மேற்பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படுமா?
(2)குடிநீர் ஒரு நபருக்கு அல்லது குடும்பத்திற்கு தினசரி எத்தனை லிட்டர் வழங்க வேண்டும்? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
(3)குடிநீர் குழாய் உடைந்து சுகாதாரமற்று விநியோகமாகிறது.தகவல் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் சரிசெய்யப்படாதது ஏன்?
(4)கொசுத்தொல்லை அதிக அளவு உள்ளது.தடுக்க வழிவகை செய்யப்படுமா?எவ்வாறு?
மேலே கோரிய தகவல் தங்களது பேரூராட்சிக்குட்பட்ட (கரட்டூர்)5-வது வார்டு குறைகள் ஆகும். இந்த விண்ணப்பத்தின் கட்டணமாக ரூபாய் 10/- நீதிமன்ற வில்லை ஒட்டி உள்ளேன். உடனே தகவல் கொடுக்கவும்.
தேதி;-28-06-2013. தங்கள் உண்மையுள்ள,
C.பரமேஸ்வரன்,
செயலாளர்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை
பாதுகாப்பு சங்கம்.-தமிழ்நாடு.(பதிவு எண்;-26 / 2013)
=========================
web:-consumerandroad.blogspot.com
Email:- consumerandroad@gmail.com
குறிப்பு;-தகவல் பெறும் உரிமைச்சட்டம்-2005 நமக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்றும் அதாவது,பகலில் கிடைத்த முதல் சுதந்திரம்.என்றும் ஊரார் மத்தியில் விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம். பேரூராட்சியில் எத்தனை துரிதமாக ?என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என பொறுத்திருந்து பார்ப்போம்.( நமது நோக்கம் யாருடைய மனதையும் காயப்படுத்துவது அல்ல. நமது உரிமையைக்கேட்கிறோம்.).