Wednesday, 25 September 2013

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்.நம்ம ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம்.
 அழைப்பிதழ்  கீழ்கண்டுள்ளபடி காண்க.அனைவரும் இதனையே நேரில் கொடுத்து சமூக நலனுக்காக அழைத்ததாக எண்ணி வாருங்கள்,வாருங்கள்.உழைக்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு அழைப்பே தேவை இல்லைங்க!
என 
அன்பன்
   C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. பதிவு எண்;-26/2013.
    

போதைப்பொருட்களின் தீமைகள்-பாகம்-02

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்,
 சிபர்ஸ்ஆர்க் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி இரண்டாவது பதிவு இங்கு பாருங்க..

தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
மதுவின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
போதையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
போதைப்பொருட்களை பயன்படுத்தினால்,மிருக நிலைக்கு போவோம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,போதைப்பொருட்களை பயன்படுத்தினால் வம்புச்சண்டைக்கு போவோம் என்று 
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குடும்பத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குழந்தைகளுக்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சமூகத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சுற்றுச்சூழலும் பாதிக்கும்,சுகாதாரமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கல்லீரல் வீக்கம் வரும் என்று,ஈரல் புற்றுநோயும்  வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நரம்புகளும் பாதிக்கும்,நினைவுகளும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கணையமும் பாதிக்கும்,சிறுநீரகமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
இல்லறமும் பாதிக்கும்,இனிய உறவும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
ஆண்மையும் பாதிக்கும்,பெண்மையும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
உணவுக்குழாய்களும் பாதிக்கும்,உடல்நலமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தொற்றுநோய்களும் சீக்கிரமாக வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
வந்த நோய்கள் விலகாமல் வாழ்க்கையும் பாழாகும் என்று,
நரம்புத்தளர்ச்சி வரும் என்று,கை,கால் நடுக்கம் வரும் என்று,
ஞாபக மறதி வரும் என்று,
மனநோயாளி ஆவோம் என்று,
கீழ்த்தரமாக நடப்போம் என்று,
சுய நினைவு இழப்போம் என்று,
புகை,மது,போதை,மெல்லக் கொல்லும் விஷம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நச்சுத்தன்மை கூடும் என்று,
நிகோட்டீன் விஷம் உள்ளதென்று,
கேட்மின் விஷம் உள்ளதென்று,
உழைக்கும் வயதை பாழாக்கும்,உயர்ந்த மதிப்பை பாழாக்கும்,
உடல் நலத்தை பாழாக்கும்,மனநலத்தை பாழாக்கும்,
வருமானத்தை பாழாகும்,பொருளாதாரத்தை பாழாக்கும்,
குடும்ப மகிழ்ச்சியை பாழாக்கும்,குழந்தைகள் எதிர்காலத்தை பாழாக்கும்,
இளைஞர்கள் எதிர்காலத்தை பாழாக்கும்,நாட்டையே பாழாக்கும்,
நம் இனத்தையே பாழாக்கும்.என்று நாம்
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
   தொடரும் ........என அன்பன் உங்கள் டிரைவர் பரமேஸ்வரன்.தாளவாடி.

போதைப்பொருட்களின் தீமைகள்-கோஷங்கள்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்26/2013 வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
புகை,மது,போதைப்பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு காண்போம்.

(1) நன்மை இல்லை,நன்மை இல்லை,
சிறிதளவும் நன்மை இல்லை,
புகை பிடிப்பதால் நன்மை இல்லை,
மது அருந்துவதால் நன்மை இல்லை,
போதைப்பொருட்களால் நன்மை இல்லை,
புகையிலையால் நன்மை இல்லை,
போதை ஊசியால் நன்மை இல்லை,
போதை மருந்துகளால் நன்மை இல்லை,
போதை லேகியத்தால் நன்மை இல்லை,
போதை பாக்குகளால் நன்மை இல்லை,
பீடி,சிகரெட்டால் நன்மை இல்லை,
மூக்குபொடியால் நன்மை இல்லை,
நன்மை இல்லை,நன்மை இல்லை,
சிறிதளவும் நன்மை இல்லை,
நன்மை இல்லை,கொஞ்சங்கூட நன்மை இல்லை,.
(2)தீமைதாங்க,தீமைதாங்க,
புகை பிடித்தால் தீமைதாங்க,
பீடி,சிகரெட்டால் தீமைதாங்க,
மூக்குப்பொடியால் தீமைதாங்க,மது அருந்தினால் தீமைதாங்க,
போதை பாக்குகளால் தீமைதாங்க,
நுரையீரலுக்கு தீமைதாங்க,
பல்லீறுகளுக்கு தீமைதாங்க,
வாய்,உதடுகளுக்கு தீமைதாங்க,
தொண்டைகளுக்கும் தீமைதாங்க,
மற்றவர்களுக்கும் தீமைதாங்க,
போதைப்பொருட்களால் தீமைதாங்க,
நரம்பு மண்டலத்திற்கும் தீமைதாங்க,
கண் பார்வைக்கும் தீமைதாங்க,
கல்லீரலுக்கும் தீமைதாங்க,
இரைப்பை க்கும் தீமைதாங்க,
சிறுநீரகத்திற்கும் தீமைதாங்க,
ஹார்மோன் சுரப்பிகளுக்கும் தீமைதாங்க,
அடுத்தவருக்கும் தீமைதாங்க,
ஆண்மைக்கும் தீமைதாங்க,
பெண்மைக்கும் தீமைதாங்க,
இனப்பெருக்கதிற்கும் தீமைதாங்க,
பிரசவத்திற்கும் தீமைதாங்க,
குழந்தை பிறப்புக்கும் தீமைதாங்க,
பிறக்கும் குழந்தைக்கும் தீமைதாங்க,
பிறந்த குழந்தைக்கும் தீமைதாங்க,
உடலுக்கும் தீமைதாங்க,
உள்ளத்திற்கும் தீமைதாங்க,
பயன்தரும் மருந்துகளுக்கும் தீமைதாங்க,
பாட்டாளி வர்க்கத்திற்கும் தீமைதாங்க,
குடும்பத்திற்கும் தீமைதாங்க,
சமூகத்திற்கும் தீமைதாங்க,
சுகாதாரத்திற்கும் தீமைதாங்க,
சுற்றுச்சூழலுக்கும் தீமைதாங்க,
வருமானத்திற்கும் தீமைதாங்க,
பொருளாதாரத்திற்கும் தீமைதாங்க,
போதைப்பொருட்களின் தீமைகளை- சிந்தனை செய்து பாருங்க,
போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் சீரழிந்து போவீங்க.,
(3)மானம் போகும்,மரியாதை போகும்,
மது,போதை,புகையிலையால்,
மனிதப்பண்பு மறந்து போகும்,
மது,போதை,புகையிலையால்,
கெட்டுப்போகும்,கெட்டுப்போகும்,
நுரையீரலும் கெட்டுப்போகும்,
வாயும்,உதடுகளும் கெட்டுப்போகும்,
குரல்வளையும் கெட்டுப்போகும்,
பார்வைத்திறனும் கெட்டுப்போகும்,
நம்ம அறிவும் கெட்டுப்போகும்,
சிந்திக்கும் ஆற்றலும் கெட்டுப்போகும்,
சுயநினைவும் கெட்டுப்போகும்,
சிறுநீரகமும் கெட்டுப்போகும்,
மூளைத்திறனும் கெட்டுப்போகும்,
உணவுக்குழாய்கள் கெட்டுப்போகும்,
உறவுகளும் கெட்டுப்போகும்,
பொருளாதாரமும் கெட்டுப்போகும்,
 வருமானமும் கெட்டுப்போகும்,
வாழும் வயதும் கெட்டுப்போகும்,
புகை,மது,போதையால்
ஒழுக்கம் கெடும்,உயர்வு கெடும்,
புகை,மது,போதையால்
அறிவும் கெடும்,ஆற்றலும் கெடும்,
புகை,மது,போதையால்
அன்பு நிறைந்த குடும்பம் கெடும்,
புகை,மது,போதையால்
மரியாதை கெடும்,மானம் கெடும்,
            தொடர்ச்சி அடுத்த பதிவு பாருங்கள்.......
   என அன்பன் 
 C.பரமேஸ்வரன், parameswarandriver-Thalavadi-Erode Dt.
 
 

போதையின் அவமானங்கள் படங்கள்.

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். 
  ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்''-
                     தமிழ்நாடு.பதிவு எண்;-26 / 2013.
               வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.



                 













                 இன்றைய சமூகச்சூழலில் இளைய சமூகம் விளையாட்டாகவோ,பொழுதுபோக்காகவோ,நட்பு வட்டங்களாலோ,நாகரீகம் என்ற மாயை காரணமாகவோ,இயந்திரமயமான சிக்கல் நிறைந்த வாழ்க்கைச்சூழலில் தன்னம்பிக்கை இழந்து சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வாழ்க்கையில் வெறுப்பு,கேளிக்கை விருந்து,விருந்தோம்பல்,திருவிழா காலங்களில்,திருமண நிகழ்வுகளில்,புத்தாண்டு தின நிகழ்வுகளில்,பிறந்த நாள் கொண்டாட்டம்,துக்க அனுசரிப்பு,என எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும்புகை, மது, போதைப்பொருட்கள்,பயன்பாடு கலாச்சாரமாக ஏற்கப்பட்டு அதன் விளைவாக இந்த சமூகம் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள்,பள்ளி மாணவர்கள்,என நாளைய உலகை ஆளும் இளைஞர்கள் அதிக அளவு குடிபோதையில் ஈடுபாடு கண்டு அடிமைகளாக மாறி,உழைக்கும் வயதை,வாழும் வயதை பாழ்படுத்திக்கொண்டு,பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகி,குழந்தைப்பேறு குறைபாடு கண்டு சந்ததிகளையே  இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே இந்த சமூகத்திற்கு புகை,மது,போதைப்பொருட்களின் தீமைகளும்,ஆபத்துகளும் பற்றி விழிப்புணர்வு கொடுப்பதற்காக நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியை இளைஞர்கள் தற்பாதுகாப்பு இயக்கமாக வருகிற அக்டோபர் மாதம் 01ம் தேதி முதல் 08ம் தேதி வரை ''போதைப்பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' என்ற மாபெரும் இயக்கத்தினை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை .,கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபிசெட்டிபாளையம்.,காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்.,நகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.(பதிவு எண்; 26/2013) இணைந்து நடத்துகின்றன.துவக்கவிழா,என துவங்கி பல்வேறு தளங்களில் ஏழு நாட்கள் பிரச்சாரம் செய்து பிறகு எட்டாம் நாள் நிறைவுவிழா கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.சிறப்புரை ஆற்ற நம்ம ஈரோடு கதிர் ஐயா 

      அவர்கள் ''வாழ்வும்,பொறுப்பும் நம்மிடமே'' என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.











                                                        
             
              மேலே உள்ள படம்  மூளையை பயன்படுத்த!, உணர்த்துகிறதுங்க!.

                ,இந்த உதாரணப்புகைப்படங்களை பார்வையிட்டதுமே தங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.