Wednesday, 26 November 2014

பயனுள்ள இணையதள முகவரிகள்


மரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
    நமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்
01. இந்தியதேர்தல் ஆணையம் – இணையதள முகவரி
http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி http://www.rtiindia.org/forum/content/
03. இந்திய அரசின் இணையதள முகவரி http://india.gov.in/
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி http://www.tn.gov.in/
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி http://supremecourtofindia.nic.in/
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி http://www.tnpolice.gov.in/
07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி http://www.hcmadras.tn.nic.in/
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி http://www.indianrailways.gov.in/indianrailwa…/indexhome.jsp
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி http://www.indianembassy.org/
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி http://www.tnreginet.net/
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி http://www.mca.gov.in/
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி http://www.chennaicorporation.gov.in/
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி http://tnvelaivaaippu.gov.in/EmploymentExc…/…/loginFrame.jsp
14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி http://www.indiapost.gov.in/nsdefault.htm
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி http://www.incredibleindia.org/index.html
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி http://www.tamilnadutourism.org/
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி http://www.tneb.in/

கோவை சாந்தி சோஷியல் சர்வீசஸ் -கோவை



ரியாதைக்குரியவர்களே,
                  வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
               நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .
             நம்முடைய கோயமுத்தூரில் பல்வேறு வழிகளில் பொதுமக்களின் பணத்தையும் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அரசு துறைகள்அதிகாரிகள் ஆகியோர்களுக்கு இடையே, 

           தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  
                   அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , 
      சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். 
                   தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் சர்வீசஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.
அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2.   24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். நம்பினால் நம்புங்கள், எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான வரி அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய் என்பதில் இருந்து, இவர்களின் லாப நோக்கமற்ற சமூக சேவையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.மற்ற விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்க.

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.
மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், நாளொன்றிற்கு 10,000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர் ,
 

                  ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறது.
              சமூக நலனில் அக்கறைகொண்ட  சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளைக்கும், அதை நிறுவியவர்களுக்கும் கோவை மக்களின் சார்பாக மட்டுமல்லங்க தமிழ்நாட்டின் சார்பாக  ஒரு ராயல் சல்யூட்.

         இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை..

ஆப்பிள் பழம் வாங்கும் முன் யோசியுங்க!


மரியாதைக்குரியவர்களே,
                                 வணக்கம்.
                 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். ஆப்பிள் பழத்தின் மேல் ஒட்டியுள்ள ஸ்டிக்கரும் அதன் மீது பதியப்பட்டுள்ள எண்களும் பற்றி இங்கு விளக்கம் காண்போம்.
           
   PLU code (price lookup number)  
                         இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது...

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

                              ( PLU code - price lookup number)
           திரு.முகம்மது அலி அவர்களுக்கு நன்றி ..