Monday, 19 January 2015

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி-2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  தற்போது நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு இருக்கின்றன.தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் இயக்கப்பட்டு வருகின்றன.வாகனங்களின் அடர்த்தி,மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் சாலைப்பயண அதிகரிப்பு,வாகன ஓட்டுனர்களின் அதிவேகம்,பயண நேரத்தைக் குறைத்து அதிக பலனைப் பெறலாம் என்ற தவறான கணிப்பு,ஓய்வின்றி உழைப்பு,மது மற்றும் போதைப்பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல்,பழுதான மற்றும் பராமரிப்புக்குறைந்த வாகனங்களை சாலையில் இயக்குதல்,சாலை விதிகளை அலட்சியம் செய்தல்,அறியாமை,போன்ற காரணங்களால் சாலை விபத்துக்கள் தினசரி அதிகரித்து கொடுங்காயம்,ஊனம்,உயிரிழப்பு போன்ற துயரங்களுக்கும் ஆளாகி மற்றவர்களையும் பாதிப்புக்கு ஆளாக்கும் நிலை பெருகி வருகின்றன.
 இத்தகைய சூழலில் சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள்,பயணிகள்,இரு சக்கர வாகன ஓட்டுனர்கள்,கனரக மிதரக வாகன ஓட்டுனர்கள்,தொழில் சாராத ஓட்டுனர்கள்,என அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்ய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி பெறுவோம்.அதன்படி நடப்போம்.
(1)சாலை விதிகளை மதிப்போம் - விபத்தினை தவிர்ப்போம்.
(2)ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டாதீர்,
(3)சாலையின் நடுக்கோட்டை ஒட்டிச்செல்லாமல் இடது புறமாக வாகனத்தை ஓட்டிச்செல்வீர்,
(4)எவ்வளவு அவசரமானாலும் எதிரில் வாகனம் வரும்போது விளக்கைப்போட்டுக்கொண்டு முந்தாதீர்,
(5)நம்மை பிற வாகனங்கள் முந்தும்போது வலது பக்கமாக வரக்கூடாது.
(6)பேருந்து நிறுத்தங்களில் வாகனத்தை முந்தாதீர்,
(7)நிற்கும் வாகனத்தின் முன்னாலோ,பின்னாலோ சாலையை கடக்காதீர்,மறைவுப்பகுதி என உணர்வீர்,
(8)வலது பக்க இண்டிகேட்டரை போட்டு முந்திச்செல்ல அறிவுறுத்தாதீர்,
(9) ஓடும் வாகனத்தை முந்தும்போது எதிரே எந்த வாகனம் வந்தாலும் அவர்களுக்கு இடையூறாக முந்தாதீர்,
(10)நான்கு தடச்சாலைகளில் இடது பக்கமாகவே ஓட்டுவீர்,முந்தும்போது வலது பக்கமாகவே முந்துவீர்.
(11)குறுகிய பாலம்,சாலை வளைவுகளில்,ஓடும் வாகனத்தை முந்தாதீர்,
 பார்வை மறைவுப்பகுதிகளில் கவனமாகச்செல்வீர்,
(12)நான்குபுறமும் எரியும் இண்டிகேட்டரை வாகனம் பழுதாகி நிற்கும்போது மட்டும் உபயோகிப்பீர்.
(13)செல்போன் பேசிக்கொண்டோ,காது ஒலிப்பானை மாட்டிக்கொண்டோ வாகனத்தை ஓட்டாதீர்,
(14)குடிபோதையிலும்,மருந்துண்ட மயக்கத்திலும்,தூக்கக் கலக்கத்திலும்,தொடர்ச்சியாக ஓய்வின்றியும் ,வாகனத்தை ஓட்டாதீர்,
(15)எந்தச்சூழ்நிலையிலும் வாகனத்தை அதிவேகமாக ஓட்டாதீர்,
(16)கிளைச்சாலையிலிருந்து பிரதானச்சாலையில் நின்று நன்கு கவனித்து எச்சரிக்கையாக நுழைந்து செல்வீர்,
(17)முடிந்தவரை மற்ற வாகனங்களுக்கு பிரேக் அடிக்கும் வேதனை தராமல் சீராக ஓட்டுவீர்,
(18)முன் செல்லும் நெருங்கியவாறு பின்தொடராதீர்,
(19)ஆம்புலன்ஸ்,தீயணைப்பு,மீட்பு வாகனங்களுக்கு அதாவது அவசர வாகனங்களுக்கு வழிகொடுப்பீர்,
(20)போக்குவரத்துச் சின்னங்கள்,சாலைக் குறியீடுகள்,சைகைகள் சாலையின் குரலாகும் எனவே  சாலையின் குரலை மதித்து நடப்பீர்,
(21)பேருந்து படியில் நின்றுகொண்டு பயணம் செய்யாதீர்,
(22)ஓடும் பேருந்தில் ஏறவோ,இறங்கவோ வேண்டாம்,
(23)ஓட்டுனரிடம் பேசிக்கொண்டோ,ஓட்டுனருக்கு இடையூறாக அமர்ந்துகொண்டு அல்லது சுமைகளை வைக்கவோ வேண்டாம்.
(24)நகர எல்லைக்குள் அதிவேகம் வேண்டாம்.கட்டுப்பாடான வேகம் தேவை.அதிக ஒலி கொண்ட ஒலிப்பானை தவிர்க்கவும்.
(25)ஓடும் பாதையில் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்ய வேண்டாம்.ஆக்கிரமிப்பு செய்யாதீர்.
(26)இரவில் டிம் அடித்து  முகப்பு விளக்கின் ஒளியை தாழ்த்திடுவீர்.
(27)பகலில் முகப்பு விளக்கு போட்டுக்கொண்டு ஓட்டாதீர்,
(28)பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகில் ஒலிப்பானை பயன்படுத்தாதீர்,
(29) பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி ஓட்டுனரின் மூன்றாவது கண் என்பதால் திசை திருப்பும் போது பின் பார்க்கும் கண்ணாடியை பார்த்து கவனமாக திருப்புவீர்,
(30)வாகனத்தை பின்னோக்கி இயக்கும்போது உதவியாளர் அல்லது நடத்துனர் உதவியுடன் ஓட்டுவீர்.
(31)சீட் பெல்ட் அணிந்து பயணிப்பீர்.
(32)தலைக்கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பயணிப்பீர்,
(33)இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணிக்க வேண்டாம்.
(34)சரக்கு வாகனங்களில் பயணிக்காதீர்,
(35)சாலையை பயன்படுத்துபவர்களை அனுசரித்து வாகனத்தை ஓட்டுவீர்,
(36)சாலை அனைவருக்கும் பொதுவானது என்பதை உணர்வீர்,
(37)போக்குவரத்துச்சட்டங்களையும்,விதிகளையும் மதித்து நடப்பீர்,
(38) தான் என்ற ஆணவம் வாகன ஓட்டத்தின்போது வேண்டாம்.
(39)அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றாதீர்,
(40)இடையூறு ஏற்பட்டால் ஓட்டுனர் வாகனத்தை பிரேக் போட்டு நிறுத்த அதிக நேரம் ஆகும் ஆதலால் அதற்கேற்ற தூரம் சென்றுதான் நிற்கும் என்பதை உணர்வீர்,
(41)சராசரி மனிதனின் சிந்திக்கும் நேரமும் செயல்படும் நேரும் இரண்டரை வினாடி ஆகும்.அதற்கேற்ற தூரம் சென்றுதான் வாகனம் நிற்கும்.
(42)பாதசாரி நடைவேகம் ஒரு வினாடிக்கு இரண்டடி ,ஓடும் வேகம் ஐந்து அடி ஆகும்.
(43)ஓட்டுனர் பயிற்சிப்பள்ளியில் புத்தாக்கப்பயிற்சி பெறுவீர்,
(44)சாலை அறிவும்,வாகன அறிவும் பெறுவீர்,விபத்தினை தவிர்ப்பீர்.
(45)இடதிற்க்கேற்ப வாகனத்தை உரிய வேகத்தில் ஓட்டுவீர்,
(46) இரவு நேரத்தில் ஒற்றை முகப்பு விளக்குடன் ஓட்டாதீர்,
(47)வலது பக்கம் செல்பவருக்கே முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பாக ஓட்டுவீர்,
(48)உடல் நலமும்,மன நலமும் அத்தியாவசிய சொத்து என்பதை மறவாதீர்.
(49)தனி மனித ஒழுக்கம் பேணுவீர்,பொது வாகனம் பயன்படுத்தி.தனி வாகனப்பயன்பாட்டைக்குறைப்பீர்,
(50)புகைப்பரிசோதனை செய்வீர்,சுற்றுச்சூழலைக் காப்பீர்,

No comments:

Post a Comment