Tuesday, 30 April 2013

சர்வதேச நுகர்வோர் உரிமைகள்

  மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.


 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் - தமிழ்நாடு - -வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                 1899-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் அமைப்பு உருவாக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 1936-ஆம் ஆண்டு டாக்டர் 'கால்ரூ டன் வார்னன்' அவர்கள் அமெரிக்காவில் நுகர்வோர் ஒருங்கமைப்பு என்னும் நுகர்வோர் அமைப்பினை உருவாக்கினார்.இந்நிலையில் அமெரிக்க சனாதிபதி ஜான் எப்.கென்னடி அவர்கள் 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் நாளன்று நுகர்வோர் உரிமைகள் சட்டத்தை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றினார்.
  இங்கு சர்வதேச நாடுகளுக்கான ஐக்கிய நாட்டு சபை அறிவித்துள்ள  நுகர்வோர் உரிமைகள் எவை? என காண்போம்.
  உலக நுகர்வோர் உரிமைகள் எட்டு.
(1)பாதுகாப்பு உரிமை,
 (2)தகவல் பெறும் உரிமை,
(3)தேர்ந்தெடுக்கும் உரிமை,
(4)முறையீட்டு உரிமை,
(5)நுகர்வோர் கல்வி பெறும் உரிமை,(நுகர்வோர் உரிமைகள் பற்றிய விவரங்கள் அறியும் உரிமை)
(6)நிவாரணம் பெறும் உரிமை,
(7)சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை,
(8)அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை.
 ஆகியன ஆகும்.

No comments:

Post a Comment