மரியாதைக்குரிய நண்பர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (National Consumer Dispute Redressal Commission) இதனை சுருக்கமாக தேசிய ஆணையம்(National Commission) என்று கூறுவது உண்டு.
தேசிய ஆணையத்தில் தலைவராக இடம்பெறுபவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவர் அல்லது உச்சநீதிபதியாக இருந்த ஒருவர் ஆக இருக்க வேண்டும்.இவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும்.ஆனால் இப்பிரிவின்கீழ் நியமிக்கப்படும் எந்த ஒரு நியமனமும் இந்தியாவின் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து அதன்பிறகே செய்யப்படுதல் வேண்டும்.
உறுப்பினர்களில் ஒருவரைப் பெண்மணியாக க் கொண்டதும்,நான்கிற்கும் குறையாத மற்றும் குறித்துரைக்கப்படலாகும் அத்தகு எண்ணிக்கைக்கும் மிகாத உறுப்பினர்கள் கீழ்கண்ட தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.குறைந்த பட்ச வயது 35 வருடங்கள் ஆகும்.
அவர்கள் பொருளாதாரம்,சட்டம்,வணிகம்,கணக்குப்பதிவியல்,தொழில்,பொதுவிவகாரம் அல்லது நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை குறைந்தபட்சம் பத்தாண்டு காலத்திற்கு கையாண்ட அனுபவத்தையும்,போதுமான அறிவையும்,திறமையையும்,நேர்மையையும் மற்றும் தகுநிலையையும் பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் உறுப்பினர்களில்ஐம்பது சதத்திற்கும் மிகாதவர்கள் நீதிமன்ற பின்னணி (Judicial Back ground) கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment