மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பகத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.பிளாஸ்டிக் தீமைகளும் அதனை ஆக்கப்பூர்வ பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளுதலும் பற்றி இங்கு காண்போம்.
04 மே 2012 காலை 09:04 |
பிளாஸ்டிக்
சாலை குறித்த கருத்தரங்கம் காயல்பட்டினம் நகராட்சியில் நேற்று (03-05-12 )
காலை நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு நகர்மன்ற தலைவர் ஐ.ஆபிதா தலைமை
வகித்தார். நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார் மற்றும் வருவாய்த்துறை
ஆய்வாளர் திரு.பொன்வேல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்றைய
கருத்தரங்களில் பிளாஸ்டிக் சாலைகளால் ஏற்படும் நன்மைகள் அனைத்தையும்
அசைப்படக்கருவி ஊடாக மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை தலைவர்
திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
நகர்மன்ற உறுப்பினர்.திரு.இ.எம் சாமி அறிமுக உரை ஆற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
பிளாஸ்டிக் சாலை செய்முறை
பிளாஸ்டிக்
சாலை செய்முறை குறித்து திரு.வாசுதேவன் குறிப்பிடுகையில் இயந்திரத்தில்
போட்ட சாலை போடும் சிறு சரளைக் கற்கள், 170 டிகிரி செல்சியஸ் சூடானதும்,
சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பிளாஸ்டிக் குப்பை தூவப்படுகிறது. அவை
உருகியதும், தார் ஊற்றி, கலவை தயாரிக்கப்பட்டு, சாலை போடப்படுகிறது.
பிளாஸ்டிக் சாலைகளாகும் இந்தியா
பிளாஸ்டிக்
பிடிப்புத் தன்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும், சாலைகள்
சேதமடையாமல் உள்ளன.பிளாஸ்டிக் கொண்டு அமைக்கும் சாலை, நீண்ட காலம்
நீடிக்கும் என்பதைக் கண்டறிந்த, மதுரை தியாகராஜர் கல்லூரி வேதியல் துறை
தலைவர் வாசுதேவன் நேரடி ஆலோசனையின்படி இந்தியாவில் பல்வேறு பகுதிகளில்
சாலைகள் போடப்பட்டு வருவதை குறிப்பிட்டார்.
பிளாஸ்டிக் சாலை குறித்த சந்தேககங்களுக்கு பதில்
கருத்தரங்க
இறுதியில் பிளாஸ்டிக் சாலைகளினால் விளையும் நன்மை, தீமைகள் குறித்த
பொதுமக்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு மதுரை தியாகராஜர் கல்லூரி
வேதியல் துறை தலைவர் திரு.வாசுதேவன் விளக்கமளித்தார்.
இக்கருத்தரங்கில்
பொதுமக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இக்கருத்தரங்கிற்கு ஆத்தூர்
பேரூராட்சி தலைவர் திரு.எம்.பி முருகானந்தம்,ஆத்தூர் E.O திரு.முத்து
கிருஷ்ணன், ஆறுமுகநேரி E.O குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
தற்போது
10 மாநகராட்சி 119 நகராட்சி, 90 பேரூராட்சிகள், 45 ஊராட்சிகளில் 446.50
கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்டுவருகிறது
2012-13-ம் ஆண்டில் ரூ.100 கோடி செலவில் இந்த திட்டம்தொடர்ந்து
செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளது என அரசு அறிவித்துள்ளது.
இதனை
தொடர்ந்து நமது நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் பிளாஸ்டிக் சாலை
அமைக்க திட்டம் இருப்பதாக நகர்மன்ற தலைவர் ஐ .ஆபிதா தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்
இறுதியில் திரு.வாசுதேவன் அவர்களுக்கு நகர்மன்ற ஆணையர் திரு.அசோக் குமார்
பொன்னாடை அணிவித்து கெளரவித்தார.இதனை அடுத்து நன்றி உரையுடன்
இக்கருத்தரங்கம் நிறைவுற்றது.
நகரில் பிளாஸ்டிக் சாலை அமைக்க திட்டம்
தற்போது
நகரில் பிளாஸ்டிக் சாலை அமையவிருக்கும் பகுதிகளான கூலக்கடை பஜார்,
கொச்சியார் தெரு மற்றும் அருனாசலபுரம் ஆகிய பகுதிகளுக்கு நகர்மன்ற தலைவர்
ஐ.ஆபிதாவுடன் நேரில் சென்று திரு. வாசுதேவன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஒப்பந்தக்காரர் திரு.ஜமீன் ராஜ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களான M.S.M சம்சுத்தீன், M.M.T. பீவி பாத்திமா,மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் உடன் இருந்தனர்.
பிளாஸ்டிக் சாலை போடும்போது தாம் வருகை தந்து சில ஆலோசனைகள் வழங்குவதாக திரு.வாசுதேவன் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
நம்மால் தவிர்க்கமுடியாத அடிமையாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவினை பயனுள்ள வகையில் பிளாஸ்டிக் தார்ச்சாலை போட கண்டுபிடித்த முனைவர்.வாசுதேவன் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அவர்களை நாமும் வாழ்த்துவோம்.இச்செய்தி வெளியிட்ட www.kayalnews.com வலைத்தளத்திற்கு நன்றிகள் பல கூறுவோம்.
|
No comments:
Post a Comment