Tuesday, 1 October 2013

"போதையும்-மீட்பும்" கருத்து சேகரிப்பு-அக்-02

மரியாதைக்குரியவர்களே, 
                  வணக்கம்.


         இரண்டாவது நாளான  அக்டோபர்02ம் தேதி இன்று - இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு

           காலை07-00 மணிக்கு விளையாட்டுத்திடல் (சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம்)) இளைய சமுதாயம் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரித்தல்.

  காலை 08-00 மணிக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்-கரட்டூர் கருத்து சேகரித்தல்.



  மரியாதைக்குரிய ஊர் பெரியவர் அவர்களிடம்  கருத்து சேகரித்தல்.




 ,திரு.முடி திருத்துனர் மற்றும் அங்கு குழுமியிருந்த பெரியோர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரித்தல்.




திரு.கிளை மேலாளர், அவர்கள்-சத்தியமங்கலம் கிளை -அவர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.




 சத்தியமங்கலம் வாடகைக்கார் உரிமையாளர்கள்&ஓட்டுனர்கள் பஸ் நிலையம்-கருத்து சேகரிப்பு.




 கோபி செட்டிபாளையம்-ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தியமங்கலம் பேருந்து நிலையம்-ஆவின் பாலகம்-போக்குவரத்து தொழிலாளர்களிடம் கருத்து சேகரிப்பு.



கோபி செட்டிபாளையம் இந்திரா தியேட்டர் முன்புறம் வாடகை டெம்போ உரிமையாளர்கள்&ஓட்டுனர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தி பேருந்து நிலையம் READ சமூக சேவை அமைப்பினர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.
   
  சத்தியமங்கலம் அம்மா குடிநீர் அங்காடியில் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரிப்பு.
என அன்பன்
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்:26/2013
E-Mail: consumerandroad@gmail.com              

இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்''கருத்து சேகரிப்பு.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,

                                                                         வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                    அக்-02ம் தேதி தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா ஒருவார விழிப்புணர்வு இயக்கம்- இரண்டாம் நாள் இன்று பொதுமக்களிடம் -இளைய சமுதாயம் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரிப்பு நிகழ்ச்சிங்க.அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைங்க!....
                     
     

                மேலே உள்ள படத்தை! சற்று உன்னிப்பாக கவனியுங்க! கையில் சிகரெட்டும்,மதுவும் பாருங்க!.இந்த நிலை அவசியமா?இக்குழந்தைக்கு என்ன வயது இருக்கும்?இதன் விளைவு எங்கு சென்று முடியும்?

                        
அதாவது,இன்றைய சூழலில் இளைய சமுதாயம் பல்வேறு தவறான மனப்பாங்கினால் தன் வாழ்க்கையை,தம் குடும்பத்தை,தன்னையே அழித்துக்கொள்ளும் அபாய நிலையான பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளாகி,அடிமையாகி வருகின்றன.

                  முதலில் விளையாட்டாகவோ,சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான சம்பிரதாயமாகவோ குடிக்க,போதை பழக்கத்தை ஆரம்பித்து காலப்போக்கில் அடிமையாகி சமூக சீரழிவு ஏற்படும் அபாயகரமான சூழல்நிலை நம் தேசத்தை ஆட்கொண்டுள்ளது.அந்த அபாயத்திலிருந்து மீட்டெடுக்க 
                 இளைய சமுதாயம் போதை பழக்கத்தில்  வீழ்வது எப்படி? அவ்வாறு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்டெடுப்பது எப்படி? 
        என  தங்களது கருத்துகளை தாங்களே சிந்தனை செய்தும் கூறலாம்.தங்களது குடும்ப உறவுகளிடம்,நட்பு வட்டங்களிடம்,சுற்றத்தினரிடம்  கேட்டறிந்து கூறலாம்.,பேருந்து நிலையங்கள்-போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில்,மது விற்பனையாளர்களிடம்,மது அருந்துபவர்களிடம் கேட்டு கூறலாம். அறிஞர் பெருமக்களிடம்,கல்வியாளர்களிடம்,சான்றோர்களிடம்,
அரசுத்துறையினரிடம்,
நீதியரசர்களிடம், வழக்கறிஞர்களிடம்,அறிவியல் அறிஞர்களிடம்,சமூக ஆர்வலர்களிடம்,தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம்,தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற மக்கள் சேவை இயக்கங்களிடம்,மாணவர்களிடம்,கல்லூரி விடுதிகள்,பள்ளி விடுதிகள்,தங்கும் விடுதிகள்,அரசு நிறுவனங்களிடம்,அரசியல் நண்பர்களிடம்,என நமது சமூகம் எங்கெங்கு நிறைந்துள்ளதோ,அங்கெல்லாம் சிறிதும் வெட்கப்படாமல்,தடுமாற்றம் இல்லாமல், சமூக நலனுக்காக பத்து நிமிடங்களை ஒதுக்கி -
           நமது இன்றைய இந்திய செல்வங்களாம் இளைஞர் வளத்தை பாதுகாக்க,
                 போதையில் சிக்குண்டவர்களை மீட்டெடுக்க,எதிர்கால இந்தியாவை பாதுகாக்க,மொத்தத்தில் இந்தியாவின் வளம் மிக்க இளைஞர்களை நல்வழிப்படுத்தி கற்பனை மிகுந்த இளமைவளத்தை,கண்டுபிடிப்புகளுக்கு உகந்த இளமை வளத்தை,வேகம் மிக்க இளமை வளத்தை 
                        தனி மனித குடும்ப நலனுக்காக,நாட்டின் நலனுக்காக,நம் சந்ததியினரின், வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக,நம் வழித்தோன்றல்களை பாதுகாக்க,அடுத்த தலைமுறையினரை சீர்படுத்த,அறிவாற்றல்மிகுந்த சிறப்பு மிகு பாரதத்தை உருவாக்க ஏற்றநிலையில்நமது இளையசமுதாயத்தை பண்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
                 இது நம் ஒவ்வொருவரின் சட்டத்தில் எழுதப்படாத அவசியக் கடமையும் ஆகும்.மற்றும் ஒப்பற்ற சமூகப்பணியும் ஆகும். 
         இந்த வேண்டுகோள் அறிவிப்பு - தவறாகவோ,குறைகள் மிகுந்தவையாகவோ,தேவையற்றதாகவோ,விமர்சனத்திற்கு உட்பட்டதாகவோ,கண்டனத்திற்கு உட்பட்டதாகவோ,தாங்கள் கருதினால் அந்த கருத்துக்களையும் அனுப்பி வைக்கலாம்.அதனால் தங்கள் மீது தவறான மனப்பான்மையோ,கோபமோ, எவ்வித எதிர்ப்போ,வழக்கோ தொடுக்கமாட்டோம்.அதேசமயம் தங்களது எண்ணங்களை ஆய்வு செய்து  சமூக நலனுக்காக,இளைய சமுதாய நலனுக்காக தேவையான சான்றோர்கள் துணையுடன் சரியான முடிவு எடுப்போம்.
 எனவே சிரமம் பாராமல் நான்கு வரிகளாவோ,நாற்பது வரிகளாவோ தங்களது கருத்துக்களை சேகரித்து தொகுத்து அனுப்பி சமூகப்பணியில் ஈடுபட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
               தங்களது மேலான கருத்துக்களை
     (1) நேரிலோ,
      (2) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;26/2013 மாநில மையம்;அன்பு இல்லம்,கதவு எண்5,அன்பு இல்லம்,முருக முதலியார் வீதி,அரியப்பம்பாளையம் (அஞ்சல்),சத்தியமங்கலம்-638402,ஈரோடு மாவட்டம்.என்ற முகவரிக்கு தபால்வழியாகவோ,  
 (3) consumerandroad@gmail.com 
  என்றமின்னஞ்சலுக்கோ,
 (4) consumerandroad.blogspot.com -என்னும் இந்த வலைப்பக்கத்தில் பின்னூட்டமாகவோ,
   (5) parameswarandriver என்ற ஃபேஸ்புக் விலாசத்திற்கோ -
    (6) parameswarndriver என்ற Google+ சமூக தளத்திற்கோ
                 2013 அக்டோபர் ஏழாம் தேதி வரை அனுப்புங்கள்.கோபி கலை அறிவியல்கல்லூரி-கோபி செட்டிபாளையம் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம் மற்றும் நமது சிபர்ஸ்ஆர்க் அமைப்பு இணைந்து  தங்களது மேலான கருத்துக்களை சமுதாய நலனுக்கேற்ப திருத்தம் செய்து,சுருக்கி,எளிமைப்படுத்தி அதனை அரசுக்கு ஆவணமாக அனுப்ப உள்ளோம்.இந்த வலைப்பக்கத்திலும் பதிவிடப்படும்.
தங்களது கருத்துக்களை,

ஆவலுடன் எதிர் நோக்கும்,
 அன்பன்,
C.பரமேஸ்வரன்,

 அலைபேசி எண்;-09585600733 அல்லது+919585600733
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-

தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013 
E-Mail: consumerandroad@gmail.com
========================================================================
( viewer:1435இதுவரை)

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                                                                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        2013 ஆம் ஆண்டு அக்டோபர் 01.இன்று காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்-துவக்கவிழா நடைபெற்றது.
    
  
                  துவக்கி வைத்தவர்;-  
            திரு.இரா.தா.முத்து மாணிக்கம்M.A.,D.Pharm.,அவர்கள்,
ஈரோடு மாவட்ட சத்தி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


    வரவேற்புரை;-திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., அவர்கள்,உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள்  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

    தலைமையுரை;- திரு.R.பெருமாள்சாமி அவர்கள்,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
     

  முன்னிலை;-திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,அவர்கள்-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.மற்றும்,


           Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,அவர்கள்- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம். மற்றும்,
            


                திரு.A.A.இராமசாமி அவர்கள்-தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. முன்னிலை வகித்தனர்.
   
    

         நோக்கம்;-திரு.K.இராஜேந்திரன் அவர்கள்-உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.

   

     வாழ்த்துரை;-திரு.N.சரவணபவன்.B.E.,அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று.சத்தியமங்கலம்.
     

  திரு.M.R. முகுந்தன்,B.E., அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.



 திருமதி.R.ராஜம்மாள் அவர்கள்,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்.
    

   அரிமா.K.லோகநாதன் அவர்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. வாழ்த்துரை வழங்கினர்.
               அடுத்து விருந்தினர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியாக,

                     திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்களுக்கு
                 திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


               திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு
திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திருமிகு.இரா.தா.முத்து மாணிக்கம் ஐயா,சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அவர்களுக்கு திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

          Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு திரு.S.ரவி துணை தலைவர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திரு.N.சரவணபவன்.B.E.,-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று-சத்தியமங்கலம்.அவர்களுக்கு
திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

                  திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்களுக்கு
திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.



   திரு.M.R. முகுந்தன்,B.E., -மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.அவர்களுக்கு


 திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள்
திரு.A.A.இராமசாமி -தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார். 


  திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம். அவர்களுக்கு திருமிகு.P. அருந்ததி,B.E.,M.S.,செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.அவர்கள்-கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


          மரியாதைக்குரிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் திரு.C.பரமேஸ்வரன்- செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டினார்.



        நன்றியுரை;-திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள் செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,


    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;- காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்,பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தனர். 
  

           ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
 ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் முதல்நாள் நிகழ்வு இது.
    இரண்டாவது நாளாக -நாளை அக்-02 ம்தேதி இளையசமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்கள் கருத்து சேகரிப்பு.அனைவரும் கருத்து கேட்பு நடத்தலாம்.இளைய சமுதாயம் போதைப்பழக்கதிற்கு காரணம் மற்றும் மீட்புக்கான வழிமுறைகளும்  தெரிவிக்கலாம்.
பொது நலன் கருதி ;;;--
               என அன்பன்,

        பரமேஸ்வரன்.சி,
  செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவுஎண்;-26/2013. 
E-Mail: consumerandroad@gmail.com

Saturday, 28 September 2013

துவக்கவிழா அழைப்பு.01-அக்டோபர் 2013

மரியாதைக்குரியவரே,

       


வணக்கம்.
''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' துவக்கவிழா அழைப்பு காணீர்.
                 அக்டோபர் 02-ம் தேதி, இளைய சமூகம் ''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடையே  கருத்து சேகரிப்பு இயக்கம் செய்து கருத்துக்களை ஒருங்கிணைத்து சுருக்கி அதன் சாரத்தை அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
          
               அக்டோபர்-03-ம் தேதி,  சத்தியமங்கலம் அனைத்து பள்ளி மாணவர்கள் போதை தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி காலை 9.30மணிக்கு நடக்க உள்ளது.

            அக்டோபர் 04 ம் தேதி, காலை 07-00 மணி முதல் மாலை 06-00 மணி வரை  வாகன ஒலி பெருக்கி பிரச்சாரம் மற்றும் தாளவாடி பள்ளியிலும் ஆசனூர் பள்ளியிலும் கருத்தரங்கம் நடக்க உள்ளது.அப்போது  அனைத்து சமூக ஆர்வலர்கள்,ரோட்டரி கிளப்,ஒய்ஸ்மென் கிளப்,கல்வியாளர்கள்,பொதுமக்கள்,மாணவர்கள்,அரசு துறைகள் அனைவரும் கலந்து கொண்டு கருத்தரங்கத்தில் விவாதிக்க உள்ளார்கள்.

               அக்டோபர் 05 ம் தேதி காலை 07-00 மணி முதல் மாலை 07-00மணி வரை சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்,தூக்க நாயக்கன்பாளையம்ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

    அக்டோபர்-06 ம் தேதி கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம்,நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்,பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
    
         அக்டோபர் 07-ஆம் தேதி சத்தியிலிருந்து கோபி வரை ''போதை தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம்'' -விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.


  சைக்கிள் பேரணியில்  காமதேனு கலை அறிவியல் கல்லூரி- சத்தியமங்கலம் மாணவர்களும்,கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம். மாணவர்களும்  (ஐம்பது நபர்கள்)  கலந்துகொண்டு போதை தவிர்ப்பு விழிப்புரை செய்ய உள்ளார்கள்.அது சமயம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்றம் அருகில்
          ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு''. சார்பாக வரவேற்று அனைவருக்கும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
         அடுத்து காசிபாளையம்- பண்ணாரிஅம்மன் போட்டோ ஸ்டுடியோ நிர்வாகி, அவர்கள் காசிபாளையத்தில் சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் குளிர்பானம் கொடுத்து வரவேற்று சிறப்பிக்க உள்ளார்.
    அடுத்து கோபி சீதா கல்யாண மண்டபத்தில் ''கோபி-அச்சக உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்புக்குழு'' சார்பாக சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ளும் அனைவரையும் வரவேற்று- வாழ்த்தி மதிய உணவு கொடுத்து சிறப்பிக்க உள்ளார்கள்.

                அக்டோபர்-08 ம் தேதி நிறைவு விழா- கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்,KMR நினைவு அரங்கத்தில் மதியம் 2-30 மணிக்கு நடைபெற உள்ளது.சிறப்புரை ஆற்ற மரியாதைக்குரிய ஈரோடு கதிர் அவர்கள் ''வாழ்வும்-பொறுப்பும் நம்மிடமே'' என்னும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள்.
    வலைப்பதிவு வாசக பெருமக்களே,உங்கள் அனைவருக்கும் ஒரு விண்ணப்பம்.,
           இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' பற்றிய  தங்களது சமூக சிந்தனையுள்ள மேலான  கருத்துக்களை, 

                      consumerandroad@gmail.com  
        என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                 நன்றிங்க.
   என சமூக நலன் கருதி,
 அன்பன்,
 C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்:-26 / 2013

Thursday, 26 September 2013

போதை பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.-நிறைவுவிழா.

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
                  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.2013-ம் வருடத்தின் தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தின அனுசரிப்பு விழா- ஒரு வார விழிப்புணர்வு இயக்கம்- நிறைவு விழா அழைப்பிதழ் காணீர். 
          இதில் சிறு மாற்றம் 
       2013 அக் 02ம் தேதி ''இளையசமுதாயம் ''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடத்தில் கருத்து சேகரிப்பு நடத்தப்படும்.தாங்களும் கருத்து சேகரிக்கலாம்.அரசு அலுவலகங்கள்,பேருந்து நிலையங்கள்,கல்வியாளர்கள்,கல்லூரி,பள்ளி மாணவ,மாணவியர்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,லாரி நிறுத்தங்கள்,டிராவல் ஏஜென்சீஸ்,சமூக அமைப்புகள்,ஆர்வலர்கள்,கிராமவாசிகள்,போக்குவரத்து துறை,டாஸ்மாக் கடை ஊழியர்கள்,பேருந்து உட்பட ஓட்டுனர்கள்,நடத்துனர்கள்,பயணிகள்,என அத்தனை நபர்களையும் சந்தித்து கருத்து சேகரிக்கலாம்.அனைவரும் சேகரிக்கலாம்.இது மிக முக்கியம்.

      

''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.,
             இளைஞர்களை காப்போம்-இந்தியாவை காப்போம்''. 
               இதனை ஊர் அறிய செய்வோம்,உலகு அறிய செய்வோம். அனைவருக்கும் உணர்த்துவோம்.
என 
அன்புடன் 
C.பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்26/2013

Wednesday, 25 September 2013

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்.நம்ம ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம்.
 அழைப்பிதழ்  கீழ்கண்டுள்ளபடி காண்க.அனைவரும் இதனையே நேரில் கொடுத்து சமூக நலனுக்காக அழைத்ததாக எண்ணி வாருங்கள்,வாருங்கள்.உழைக்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு அழைப்பே தேவை இல்லைங்க!
என 
அன்பன்
   C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. பதிவு எண்;-26/2013.
    

போதைப்பொருட்களின் தீமைகள்-பாகம்-02

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்,
 சிபர்ஸ்ஆர்க் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி இரண்டாவது பதிவு இங்கு பாருங்க..

தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
மதுவின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
போதையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
போதைப்பொருட்களை பயன்படுத்தினால்,மிருக நிலைக்கு போவோம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,போதைப்பொருட்களை பயன்படுத்தினால் வம்புச்சண்டைக்கு போவோம் என்று 
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குடும்பத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குழந்தைகளுக்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சமூகத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சுற்றுச்சூழலும் பாதிக்கும்,சுகாதாரமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கல்லீரல் வீக்கம் வரும் என்று,ஈரல் புற்றுநோயும்  வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நரம்புகளும் பாதிக்கும்,நினைவுகளும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கணையமும் பாதிக்கும்,சிறுநீரகமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
இல்லறமும் பாதிக்கும்,இனிய உறவும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
ஆண்மையும் பாதிக்கும்,பெண்மையும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
உணவுக்குழாய்களும் பாதிக்கும்,உடல்நலமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தொற்றுநோய்களும் சீக்கிரமாக வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
வந்த நோய்கள் விலகாமல் வாழ்க்கையும் பாழாகும் என்று,
நரம்புத்தளர்ச்சி வரும் என்று,கை,கால் நடுக்கம் வரும் என்று,
ஞாபக மறதி வரும் என்று,
மனநோயாளி ஆவோம் என்று,
கீழ்த்தரமாக நடப்போம் என்று,
சுய நினைவு இழப்போம் என்று,
புகை,மது,போதை,மெல்லக் கொல்லும் விஷம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நச்சுத்தன்மை கூடும் என்று,
நிகோட்டீன் விஷம் உள்ளதென்று,
கேட்மின் விஷம் உள்ளதென்று,
உழைக்கும் வயதை பாழாக்கும்,உயர்ந்த மதிப்பை பாழாக்கும்,
உடல் நலத்தை பாழாக்கும்,மனநலத்தை பாழாக்கும்,
வருமானத்தை பாழாகும்,பொருளாதாரத்தை பாழாக்கும்,
குடும்ப மகிழ்ச்சியை பாழாக்கும்,குழந்தைகள் எதிர்காலத்தை பாழாக்கும்,
இளைஞர்கள் எதிர்காலத்தை பாழாக்கும்,நாட்டையே பாழாக்கும்,
நம் இனத்தையே பாழாக்கும்.என்று நாம்
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
   தொடரும் ........என அன்பன் உங்கள் டிரைவர் பரமேஸ்வரன்.தாளவாடி.