நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்......
நம்ம சத்தியமங்கலத்தில்..
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
2015ஜூலை 16 ந் தேதி இன்று சத்தியமங்கலம் காமதேனு கலை
அறிவியல் கல்லூரியில் நுகர்வோர்
விழிப்புணர்வு கருத்தரங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திரு.R.பெருமாள்சாமி ஐயா அவர்கள் கல்லூரி தாளாளர்
தலைமை ஏற்க
திருமதி.P.மலர்செல்வி அவர்கள்
இணை செயலாளர்
முன்னிலை வகித்தார்.
Dr.K.செந்தில் குமார் அவர்கள்,கல்லூரி முதல்வர்
சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
திரு.J. முகம்மது சதாம் உசேன்II-B.COM
IT அனைவரையும் வரவேற்றார்.
திரு.C. பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர்
பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அவர்கள் சிறப்பு
விருந்தினர்
திரு. J.M.பூபதி ஐயா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திரு.J.M.பூபதி ஐயா ''சேலம் நுகர்வோர் குரல்'' அரசு
பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் நிறுவனத்தலைவர் (சேலம்) அவர்கள்
கலந்து கொண்டு,
''மின்னுவதெல்லாம் பொன்னல்ல''
என்ற தலைப்பில் நுகர்வோராகிய
நாம்தாங்க விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி
சிறப்புரையாற்றினார்.
திரு. J.M.பூபதி ஐயா சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர்
அவர்களுக்கும் L.பிரபாகரன் சேலம் கன்ஸ்யூமர்வாய்ஸ் பொருளாளர்
அவர்களுக்கும் CITIZEN CONSUMER CLUB மாணவர்கள் சார்பாக நினைவுப்பரிசுகள்
வழங்கப்பட்டன.
திரு. திரு.M.ஶ்ரீபிரசாந்த் II - M.COM
நன்றி கூற தேசிய கீதம் பாடலுடன் நிறைவடைந்தது..
பேரா.T.சரவணன் அவர்கள்
CITIZEN CONSUMER CLUB ஒருங்கிணைப்பாளர்,நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
செய்திருந்தார்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். 2015ஜூலை12ந்தேதி இன்று புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சி திருமண மண்டபத்தில்
புன்செய்ப்புளியம்பட்டி விடியல் சமூக நல இயக்கம் ,ஶ்ரீதேனு சில்க்ஸ்,அம்மா மெட்ரிக் பள்ளி,கல்வித்தந்தை K.V.காளியப்ப கவுண்டர் நற்பணி மன்றம்,SMH ரியல் எஸ்டேட்ஸ் கோவை&புன்செய்ப்புளியம்பட்டி இணைந்து
S.S.L.C. மற்றும் PLUS TWO பொதுத் தேர்வில் ஈரோடு,கோபி,கோவை,திருப்பூர்,நீலகிரி கல்வி மாவட்டங்களில் மாநில அளவில்,மாவட்ட அளவில்,பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ,மாணவியருக்கும்,நூறுசதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும்,மாநில அளவில் சாதனை படைத்த இருபால் ஆசிரியர்களுக்கும்,பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும்
விடியல் மாணவர் விருதுகள் 2014-2015
ஶ்ரீதேனு சில்க்ஸ் முதல்வன் விருதுகள்,
அம்மா மெட்ரிக் கலைமகள் விருதுகள்,
கே.வி. காளியப்ப கவுண்டர் சாதனை விருதுகள்
வழங்கும் விழா நடைபெற்றது.திருமதி.ராணி லக்ஷ்மி அன்பு அவர்கள்,செயலாளர்,அம்மா மெட்ரிக் பள்ளி,பன்செய்ப்புளியம்பட்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார்.
திரு. எஸ்.ஜெயகாந்தன் ,செயலாளர்,விடியல் சமூக நல இயக்கம் அவர்கள்,வரவேற்புரை அளித்தார்.
திரு.R.பழனிச்சாமி அவர்கள்,,நிறுவனத்தலைவர்,S.R.S.குரூப்ஸ்,பு.புளியம்பட்டி அவர்கள் தலைமை ஏற்றார்.
முதன்மை விருந்தினராக டாக்டர்.மா.பத்மநாபன் அவர்கள்,இயக்குநர்,அண்ணா IASபயிற்சி மையம்,பாரதியார் பல்கலைக் கழகம்-கோவை அவர்களும்,
திரு.சண்முக சுந்தரம் அவர்கள், பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தின் இயக்குநர் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புனித ஜோசப்ஸ் மேல்நிலைப் பள்ளி - சூசைபுரம்,தாளவாடி-638461
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
இன்று பதிமூன்றாவது நாளாக....ஹெல்மெட் அணியுங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி.......
2015 ஜூலை 1 ந்தேதி இன்று காலை புனித ஜோசப்ஸ் மேல்நிலைப்பள்ளி,சூசைபுரம்-தாளவாடியில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.அதுசமயம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
வரவேற்புரை;திரு.அறிவழகன் அவர்கள் பள்ளி உதவி தலைமையாசிரியர்
தலைமையுரை;பள்ளியின் தாளாளரும்
தலைமையாசிரியருமான திருமிகு.பாதிரியார் அவர்கள்
தேசியக்கொடி ஏற்றும் புனிதமான நிகழ்வு;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்.
திரு.C.பரமேஸ்வரன் அவர்களது சாலை பாதுகாப்பு கல்வி தலைக்கவசம் நம் உயிர்க்கவசம் என விழிப்புரை..
இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு
விழிப்புணர்வு நோட்டீஸ்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளியின்
தாளாளர் தலைமையாசிரியர் (பாதிரியார்) அவர்கள் முன்னிலையில் மாணவர்
பொறுப்பாளர்களிடம் ஆயிரம் நோட்டீஸ் வழங்குதல்.அருகில் உதவி தலைமையாசிரியர்
திரு.அறிவழகன் அவர்கள்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். இன்று பன்னிரண்டாவது நாளாக தலைக்கவசம் நம் உயிர்க்கவசம் என தாளவாடி வட்டார பொதுமக்களிடையே விழிப்புணர்வுப்பிரச்சாரம் செய்யப்பட்டது..
KSRTC BUS SERVICE கர்நாடகா மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சாம்ராஜ்நகர் ஓட்டுநர் மாதேவ் ....
தாளவாடி மக்கள்
நம்ம தாளவாடியில் இன்று...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.தலைக்கவசம் நமது உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி பதினொன்றாவது நாளாக இன்று தாளவாடி வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம்,தலைமை தபால் அலுவலகம்,நெடுஞ்சாலை துறை அலுவலகம்,ஊராட்சி மன்றம்,அரசு மருத்துவமனை,டெம்போ ஸ்டேண்டு,கடைகள்,இருசக்கர வாகன பணிமனைகள்,புரொபசனல் கூரியர் அலுவலகம்,சமூக சேவை சங்க அலுவலகம்,உட்பட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
திரு.கல்வி மேற்பார்வையாளர் ஈரோடு அவர்கள் ,தாளவாடியில்
திருமதி.R.ராஜம்மா அவர்கள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்
தலைமையில் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தலைக்கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வு
கொடுக்கப்பட்டது.அனைவருக்கும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
திரு.C. பரமேஸ்வரன்,அவர்கள் (செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்) தலைமை ஆசிரியப்பெருமக்கள் முன்னிலையில் விழிப்புரை வழங்கியபோது....
மருத்துவர்.பாலசுப்ரமணியம் அவர்கள் அரசு மருத்துவமனை,தாளவாடி தலைக்கவசம் அணிவோம் பற்றிய துண்டறிக்கையினை பார்வையிட்டபோது....
ஊராட்சி மன்றம் தாளவாடி
டெம்போ ஸ்டேண்டு ஓட்டுநர்களிடம் தாளவாடி.
நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் தாளவாடியில்
இரு சக்கர வாகன பணிமனை தாளவாடி.
புரொபசனல் கூரியர் தாளவாடியில்...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இன்று தலைக்கவசம் உயிர்க்கவசம் என ஒன்பதாவது நாள் தொடர்ச்சியாக துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.இன்று மதியம் நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து பண்ணாரியில் உள்ள மோட்டார் வாகன சோதனைச்சாவடி,காவல்துறை சோதனைச்சாவடி,வனத்துறை சோதனைச்சாவடி,வணிகவரித்துறை சோதனைச்சாவடிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி அந்த வழியாக பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்,பயணிகளுக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புரை கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.மற்றும் பண்ணாரியில் இருந்த பக்தகோடிகளுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்யப்பட்டது.
Dr.P.வெங்கடாச்சலம்,B.A.,M(ACU).,M(Sidha).,அவர்கள்(கோபி செட்டிபாளையம்) நுகர்வோர் நல்வாழ்வு மற்றும் மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்
அவர்களும் 'ஹெல்மெட் விழிப்புணர்வு' பிரச்சாரத்தில் தன்னார்வத்துடன் பங்கேற்று துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புரை செய்தார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு-மோட்டார் வாகன சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- வனத்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- காவல்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
ஹெல்மெட் விழிப்புணர்வு- வணிகவரித்துறை சோதனைச்சாவடி - பண்ணாரி (சத்தியமங்கலம்)
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். தலைக்கவசம் நம் உயிர் கவசம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பிரச்சாரம் இன்று 27.06.2015 காலை ஏழு மணியளவில் ஒன்பதாவது நாளாக புன்செய் புளியம்பட்டியில் உள்ள...பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனையகம்,TNSTC நேரக்காப்பாளர் அலுவலகம்,ஆட்டோ நிறுத்தத்திலும்,பயணிகளுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுபிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.மேலும் புன்செய் புளியம்பட்டியிலுள்ள ஶ்ரீபாலாஜி இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ஶ்ரீகணபதி இரு சக்கர வாகன நிறுத்துமிடம், ஶ்ரீஅம்மன் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,P.K.திம்மைய கவுடர் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ராஜா இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,உட்பட அனைத்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தங்களிலும் துண்டுப்பிரசுரங்களை கொடுத்து அங்கு வரும் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புரை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்... பாலாஜி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஶ்ரீகணபதி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
P.K.திம்மைய கவுடர் டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.
ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஶ்ரீஅம்மன் சைக்கிள் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.
இன்றைய சமூகப்பணி இன்னும் தொடரும்......
என அன்பன் C.பரமேஸ்வரன்.சத்தியமங்கலம். 9585600733