மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
Consumer Protection And Road Safety Organisation - Tamil Nadu -
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
இந்த வலைப்பதிவில் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளும்,சாலைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளும் இடம் பெறும்.தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்ளை இனிதே வரவேற்கிறோம். இந்தப்பதிவில் நுகர்வோர் என்பவர் எதற்கு நுகர்வோர்? என்பது பற்றி காண்போம்.
தன்னுடைய உபயோகத்திற்காக எந்தெந்த பொருட்களையெல்லாம் வாங்கி பயன்படுத்துகிறோமோ அந்தக்குறிப்பிட்ட பொருளுக்குத்தான் நுகர்வோர் அதாவது உபயோகிப்பாளர் ஆகிறோம்.இதை நன்றாக உணரவேண்டும்.விற்பனையாளர் நுகர்வோருக்கத்தேவையான பொருளை விற்பவர் ஆவார்.அதனால் விற்பனையாளரோ,அல்லது உற்பத்தியாளரோ அந்த பொருளுக்கு நுகர்வோர் ஆக மாட்டார்.ஆனால் அதே பொருளை உற்பத்தி செய்யவும்,விற்பனை செய்வதற்கு உதவியாக இருக்கும் பொருளுக்கு அவர்கள் நுகர்வோர் ஆகிறார்கள்....
நாம் உபயோகிக்கப்பயன்படுத்தும் பொருளுக்கும், அந்தப்பொருளைப் பயன்படுத்துவதற்காக உதவிடும் அடிப்படைப் பொருளுக்கும் அவ்வாறு நாம் உபயோகிக்கும் பொருள் சம்பந்தமாக வழங்கப்படும் சேவையினையும் பயன்படுத்துவதால் சேவைக்கும் நாம்தான் நுகர்வோர்......
உதாரணம் சமைத்த உணவுப்பண்டங்கள்
பயன்படுத்தும் பொருள் ஆகும்.சமைப்பதற்கு உதவிடும் பிற பொருட்களும்
(பானை,பாத்திரம்,தண்ணீர்,அரிசி,பருப்பு, மேசை,டம்ளர்,தட்டு, அடுப்பு
,போன்றவை) உபயோகிக்கும் பொருட்களே.இந்தப்பொருட்களை கடையிலிருந்து
வீட்டிற்கு கொண்டுவர பயன்படுத்தும் போக்குவரத்து சேவைப்பயன்பாடு
ஆகும்.இவ்வாறு தொலைத்தொடர்பு சேவை,வங்கி சேவை,காப்பீடு சேவை,மருத்துவ
சேவை,கல்விச்சேவை,என சேவைகள் பல உள்ளன.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.
பணம் என்பது நமது அரசாங்கத்தால் அங்கீகாரம் செய்து நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இடையீட்டுக்கருவி ஆகும்.பண்டங்களை பெற மதிப்பீட்டுப்பொருளாகும்.ஒரு பொருளை வாங்கவும் கொடுக்கவும் உரிய மதிப்புடைய பொருளாக பயன்படுகிறது.பேருந்தில் பயணத்திற்கான அத்தாட்சியாக உள்ள ஆதாரமான பயணச்சீட்டைப்போன்று பணமும் அத்தாட்சியான பொருள் ஆகும்.ரிசர்வ் வங்கியின் கடன் பத்திரம் ஆகும்.
அதனால்தாங்க அழுக்கடைந்தாலும்,மதிப்பு குறைவதில்லைங்க.பிணத்தின் மீது கிடந்தாலும்,சாக்கடையில் விழுந்தாலும்,புதைகுழியில் விழுந்தாலும் மதிப்பு மாறாமல் குளிப்பதுமில்லை சுத்தப்படுத்துவதும் இல்லை ஆனால் அப்படியே எயிட்ஸ் இருந்தால் என்ன? தொற்றுநோய் இருந்தால் என்ன? நமது பீரோக்களிலும்,வங்கிகளிலும் பத்திரமாக அடைக்கலம் புகுந்து பாதுகாப்பாக இருக்கிறதுங்க...அதே பணம் மதிப்பு இழந்துவிட்டது?.இனி செல்லாது! என்று ரிசர்வ் வங்கி கூறட்டும்.பிறகு எங்கே பறக்கிறது! என்று எல்லோருக்குமே தெரியும்!?!......
பணம் பற்றிய பொன்மொழிகள்:-
பணம் பந்தியிலே,குணம் குப்பையிலே.-இந்தியா.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
-ஸ்மித்.
பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்.
பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
-வீப்பர்.
நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
-பெர்னார்ட்ஷா.
பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.
- வால்டேர்.
பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும். -ரஸ்கின்.
பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
- ஷோப்பன் ஹொபர்.
சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
- கோல்ட்டஸ்.
பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
- ஆலிவர் வெண்டல்.
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
- தாமஸ் பெயின்.
பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
- பிராங்க்ளின்.
பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
- தாமஸ் புல்லர்.
பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை
- டென்மார்க் பழமொழி.
பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை
- பாரசீகப் பழமொழி.
பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை
- ஆஸ்திரேலியாப் பழமொழி.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
பொதுமக்களாகிய நமது தேவையின் அளவைப் பொறுத்து,நமது எதிர்பார்ப்பினைப்
பொறுத்து,நமது விருப்பத்தினைப் பொறுத்து,நமது பயன்பாட்டினைப் பொறுத்துதான் உலகில் உற்பத்தி செய்யும் மற்றும் விற்பனை செய்யும் அனைத்து
(1)பொருட்களும்,அந்தப்பொருட்களைவைத்திருக்கவும்,பாதுகாக்கவும்,கொண்டு செல்லவும்,பயன்படுத்துவதற்கான
(2)அடிப்படைப்பொருட்களும்.அதன் சம்பந்தமான
(3)சேவைகளும்
( உதாரணமாக உணவு வழங்கல்,தங்குமிடவசதி, மின்சார வழங்கல்,மருத்து சேவை,காப்பீட்டு வசதி,போக்குவரத்து சேவை,வங்கி சேவை,தொலைத்தொடர்பு சேவை போன்றவை)
சந்தைப்படுத்தப்படுகின்றன.நமக்கு விலைக்கு விற்கப்படுகின்றன.
நமது உடல் நலனுக்காக உயிர் வாழ்வதற்காக,நாம் சந்தோசமாக இருக்க விலை கொடுத்து நமக்குத்தேவையான பொருட்களை நேர்மையான உற்பத்தியாளர்களும்,நியாயமான விற்பனையாளர்களும்,பயன்பாட்டிற்காக நம்பகமான சேவை வழங்குனர்களும் சரியான விலைக்கு தரமான பொருட்களையும்,சேவைகளையும் வழங்குகின்றனர்.
ஆனால் பணத்தாசை பிடித்த சில சுயநல வணிகர்கள்,உற்பத்தியாளர்கள்,அதிக வருமானத்திற்கான வஞ்சக குணம் கொண்ட வியாபாரிகள்,சுயநலமே குறிக்கோளாகக்கொண்டு பொதுமக்களாகிய நமது தேவையின் அளவையும்,நமது சூழ்நிலையையும்,நமது அறியாமையையும் அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்து,வஞ்சகம் செய்து,ஏமாற்றுவழிகளை கடைபிடித்து,பதுக்கல் செய்து,பற்றாக்குறை என்னும் மாயத்தோற்றத்தை உருவாக்கி, தரம் குறைந்த பொருட்களை,தரமற்ற பொருட்களை,போலியான பொருட்களை,கெட்டுப்போன பொருட்களை,பயன்பாடு குறைவான பொருட்களை,காலாவதியான பொருட்களை,கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை,கெடுதலான பொருட்களை,நாம் விரும்பும்படியாக நமக்குத்தெரியாமல் அரசால் தடைசெய்யப்பட்ட தீங்கு தரக்கூடிய ரசாயனப்பொடிகளை கலந்து சாயமேற்றி,நறுமணத்தை கொடுத்து,சுவையூட்டி,மனதைக்கவரும்படியாக தோற்றத்தில் மினுமினுப்பை ஏற்படுத்தி,தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கவர்ச்சியான விளம்பரத்தைக்கொடுத்து,அதற்காக நடிகர்களையும்,நடிகைகளையும் விலைகொடுத்து நடிப்பாலும் வசனங்களாலும் நம்மை நம்பவைத்து,கனிவாக,இனிமையாக,தந்திரமாகப் பேசி,
உடலுக்கும்,மனதிற்கும் தீங்கினைக்கொடுக்கும் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.மனதை கெடுக்கும் சேவைகளை வழங்குகிறார்கள்.
இதனால் நமது உயிர்வாழ,உடல்நலத்திற்காக,மனநிறைவுக்காக ,நமது தேவைக்காக விலை கொடுத்து வாங்கிய பொருட்களும்,சேவைகளும் நன்மை தருவதற்குப் பதிலாக நமது உடலுக்கும்,உயிருக்கும் கேடு உண்டாக்குகிறது,மன வேதனையைக்கொடுக்கிறது,மருத்துவமனைக்கும்,மருந்துக்கடைகளுக்கும் அலைந்து,,வீண் செலவழிக்க காரணமாகிறார்கள்.நம் உழைப்பும் முடங்கிவிடுகிறது.இதனால் நம் பணம் மற்றும் பொருளாதாரம் இழப்பதோடு சந்தோசத்தை பறிகொடுத்து பல தொல்லைகளுக்கும்,துன்பங்களுக்கும் ஆளாகி உயிரையே இழக்கும் பேராபத்திற்கும் காரணமாக இருக்கிறார்கள்.
சுயநலம் ஒன்றே குறிக்கோளாக கொண்ட சில வணிகர்களின் பணத்தாசை மற்றும் பேராசையால் மனச்சாட்சியே இல்லாமல் நம் உயிரோடு விளையாடுகிறார்கள்.கி.பி.1800களிலேயே அமெரிக்காவில் இவ்வாறு பாதிக்கப்பட்ட நுகர்வோரில் விழிப்படைந்த சிலர் ,நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து பல போராட்டங்களையும்,அதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் கொடுத்து நுகர்வோரை காப்பாற்ற பல தீர்மானங்களை தயாரித்து அரசாங்கத்திடம் கோரிக்கையாக வைத்தார்கள்.
எனக்கு தெரிந்தவரை கி.பி.1899ஆம் ஆண்டு அமெரிக்காவில் தேசிய நுகர்வோர் இயக்கம் ஒன்றை உருவாக்கினார்கள். அமெரிக்காவில் கி.பி.1936 ஆம் ஆண்டு 'டாக்டர், கால்ரூ டன் வார்டன்' அவர்கள் 'நுகர்வோர் ஒருங்கமைப்பு' ஒன்றினை நிறுவினார்.அதன் பிறகு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு பரிணாம வளர்ச்சியினைப் பெற்று மேம்பாடு அடைந்தது.
அமெரிக்காவில் கி.பி.1950ஆம் ஆண்டு ரால்ப் நடார் என்பவர் நவீன நுகர்வோர் இயக்கத்தை தொடங்கினார்.இவரே நவீன நுகர்வியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
அதன்பிறகுகி.பி.1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி அமெரிக்க காங்கிரஸில் திருமிகு.ஜான்.எப்.கென்னடி (அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி) அவர்கள் நுகர்வோருக்கான ஆறுஅடிப்படை உரிமைகளை அறிவித்தார்.அதன் அடிப்படையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கி.பி.1948ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பு
WHO என்னும் World Health Organisation மற்றும் கி.பி. 1945ஆம் ஆண்டு அக்டோபர் 16
ஆம் தேதி உருவாக்கப்பட்ட உணவு மற்றும் வேளாண் அமைப்பு Food and
Agricultural Organisation இரண்டும் நுகர்வோர் இயக்கத்தை மேம்படுத்தின.
அதன் பிறகு கி.பி.1973ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி முதல் உலக நுகர்வோர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ஆம் தேதி பொதுமக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.
ஐ.நா.சாசனத்தின்கீழ் அமைக்கப்பட்ட ஆறு பிரிவுகளில் ஒன்று பொருளாதார மற்றும் சமூக்ககுழு ஆகும்.
இந்தக்குழுவின் பணி சர்வதேச பொருளாதாரம்,சமூகம்,கலாச்சாரம்,கல்வியியல்,சுகாதாரம் மற்றும் அவை சம்பந்தப்பட்ட துறைகளை அமைத்து அவற்றை மேற்பார்வை செய்வதே ஆகும்.
இந்தக்குழு 'மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூகம் வளர நுகர்வோர் பாதுகாப்பு மிக முக்கியம்' என நுகர்வோர் பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்தது.
இந்த அமைப்பு 1977 ஆம் ஆண்டு நுகர்வோரியம் குறித்து பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச்செயலாளரை கேட்டுக்கொண்டது.அதன்படி ஐக்கிய நாடுகள் சபையானது பல நாடுகளின் அரசாங்கங்களையும்,பல்வேறு சர்வதேச அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து நுகர்வோர் பாதுகாப்பிற்கான 'வரைவு காட்டும் நெறிகளை' தயாரித்தது.
அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் திருமிகு.புட்ரோஸ் காலி அவர்கள் ''நுகர்வோர் பாதுகாப்பு-ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு'' என்ற தலைப்பின் கீழ் தயாரித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூகக்குழுவின் முன் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கை பற்றி அனைத்து உறுப்பு நாடுகளும் 1983ஆம் ஆண்டிலிருந்து 1985ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் ஆழமாகவும்,தீவிரமாகவும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றி விவாதித்து ஒன்றுக்கொன்று பேச்சுவார்த்தை நடத்தின.
பின்னர் 1985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி ''நுகர்வோர் பாதுகாப்பு-ஐக்கிய நாடுகளின் அமைப்பிற்கான சர்வதேச கூட்டுறவு மற்றும் ஒருங்கிணைப்பு''என்ற தலைப்பிலான நுகர்வோர் குறித்த வழிகாட்டும் நெறிகளை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளாக எட்டு உரிமைகளை அங்கீகரித்து அதன் உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டும் நெறிகளாக அறிவித்தது.
சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் விவரம் பின்வருமாறு;-
(1) நுகர்வோர் பாதுகாப்பு உரிமை,(குறைபாடுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளிலிருந்தும்,மோசடி வணிகம்,ஏமாற்று வர்த்தகம் போன்றவற்றிலிருந்தும் நமது உடல் நலனையும் உயிரையும் பாதுகாத்தல்).
(2)தகவல் அறியும் உரிமை,(பொருள் மற்றும் சேவை பற்றிய முழு தகவல்களைக்கேட்டு அறிதல்).
(3)தேர்ந்தெடுக்கும் உரிமை,(நமது விருப்பத்திற்க்கேற்றவாறு பொருட்களை மற்றும் பயன்பாட்டிற்கான சேவைகளை தேர்வு செய்துகொள்ளுதல்).
(4)முறையீட்டு உரிமை,(நாம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையில் உத்திரவாதம் முன்பே குறைபாடு கண்டறிந்தால் விற்பனையாளரிடம் சென்று முறையிட்டு பழுது நீக்கிப்பெறுதல்,புதியதாக வேறு பொருளை பெறுதல்,அதற்குரிய துகையினை திரும்பப்பெறுதல்).
(5)நுகர்வோர் பற்றிய கல்வி பெறும் உரிமை,(பாதுகாப்பு,தகவல் பெறுதல்,தேர்ந்தெடுத்தல்,முறையீடு செய்து நிவாரணம் பெறுதல் இவை பற்றிய முழு விவரங்கள் பற்றி உபயோகிப்பவர்களாகிய பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வு கல்வி பெறுதல்).
(6)நிவாரணம் பெறும் உரிமை,(விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் பொருட்களிலுள்ள குறைகளை சரி செய்து கொடுக்க மறுத்தால் குறைதீர் மன்றங்களில் மேல்முறையீடு செய்து உரிய நிவாரணம் இழப்பீட்டுத்தொகையுடன் பெறுதல்).
(7)சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை,(நம்மைச் சுற்றியுள்ள காற்று,தண்ணீர்,பூமி,இயற்கை வளங்கள்,இவைகள் மாசுபடாதவாறு பாதுகாத்தல்).
(8)அடிப்படைத்தேவைகளுக்கான உரிமை,(தனி மனித உரிமை,சுதந்திரம்,உணவு,உடை.இருப்பிடம்,பாதுகாப்பு,சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியன தடையின்றிப்பெறுதல்).
ஆகிய எட்டு உரிமைகளும் உலக நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் ஆகும்.
1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பிற்கான சில நடவடிக்கைகளை பரிந்துறை செய்து தீர்மானம் ஒன்றை ஏற்றது.
அதன்பிறகு 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 1983ஆம் ஆண்டின் வழிகாட்டு நெறிகளை ஏற்று அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.
நமது இந்திய அரசாங்கம் 1983ஆம் ஆண்டின் வழிகாட்டும் நெறிகளைப்பின்பற்றி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒன்றை தயாரித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்,மாநில நுகர்வோர் குறை தீர் மன்றம்,தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் என மூன்றடுக்கு குறைதீர் மன்றங்களை அமைத்து 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதியன்று அமல்படுத்தியது.
அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளான 1988ஆம் ஆண்டின் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக 1986ஆம் ஆண்டே செயல்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பற்றி ...................
உலக மக்களின் நன்மை மற்றும் பாதுகாப்பிற்காக பன்னாட்டு சபை என்னும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள சான் பிரான்சிஸ்கோ போர் நினைவகம் மற்றும் நிகழ்த்து கலையரங்கத்தில் உறுப்பினர் நாடுகளாக விளங்கிய 51நாடுகளில் 50 நாடுகள் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை உருவாக்கினர்.
அதே 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி முதல் செயலுக்கு வந்தது.இன்று 192 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
நிர்வாகத்தின் நலன் கருதி ஆறு அங்கங்களாக பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது.அவை
(1) ஐக்கிய நாடுகள் பொதுச்சபை-UN General Assembly,
(2)ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை-UN Security Council,
(3)ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை-UN Economic and Social Council,
(4)ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்-UN Trusteeship Council,(1994க்கு பிறகு செயலற்றுவிட்டது)
(5)ஐக்கிய நாடுகள் செயலகம்-UN Secretariat,
(6)அனைத்துலக நீதிமன்றம்-International Court of Justice
ஆகியன ஆகும்.
இந்த ஆறு அங்கங்களில் ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் 1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் கடைசிப் பொறுப்பாட்சிப்பகுதியான 'பலோ' சுதந்திரம் பெற்ற பிறகு செயலற்றுவிட்டது.தற்போது ஐந்து அமைப்புகள் மட்டுமே உள்ளன.இவற்றில் அனைத்துலக நீதிமன்றம் 'ஹேக்' நகரில் அமைந்துள்ளது.மீதி நான்கு அமைப்புகளும் நியூயார்க் நகரில் அமைந்துள்ளன.
இவை தவிர இத்தாலி நாட்டில் ரோம் நகரில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உள்ளது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்புWORLD HEALTH ORGANISATION,, செஞ்சிலுவை சங்கம்,உலக வாணிக அமைப்பு,அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு (CERN) அமைந்துள்ளன.
ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டவை:
ECE – Economic Commission for Europe
IBE – International Bureau of EducationCC – International Computing Centre
ILO – International Labour Organization
ITC – International Trade Centre
ITU – International Telecommunication Union
JIU – Joint Inspection Unit
OCHA – Office for the Coordination of Humanitarian Affairs
UNAIDS – Joint United Nations Programme on HIV/AIDS
UNHCHR – Office of the United Nations High Commissioner for Human Rights
UNHCR – Office of the United Nations High Commissioner for Refugees
UNCC – United Nations Compensation Commission
UNCTAD – United Nations Conference on Trade and Development
UNIDIR – United Nations Institute for Disarmament Research
UNITAR – United Nations Institute for Training and Research
NGLS – United Nations Non-Governmental Liaison Service
UNOPS – United Nations Office for Project Services
UNOSDP – United Nations Office on Sport for Development and Peace
UNFPA – United Nations Population Fund
UNRWA – United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near-East
UNRISD – United Nations Research Institute for Social Development
CEB – United Nations System Chief Executives Board for Coordination
UNV – United Nations Volunteers Programme
WHO – World Health Organization
WIPO – World Intellectual Property Organization
WMO – World Meteorological Organization
IAEA – International Atomic Energy Agency (Headquarters are in Vienna)
UNEP – United Nations Environment Programme (Headquarters are in Nairobi)
UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization (Headquarters are in Paris)
UNIDO – United Nations Industrial Development Organization (Headquarters are in Vienna)
WFP – World Food Programme (headquarters are in Rome)
வியன்னாவில் அகில உலக சாலை போக்குவரத்து பயண நடமாட்டத்தையும்,பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த உடன்படிக்கையின் படி அகில உலக சாலை அடையாளங்கள், போக்குவரத்து
விளக்குகள், சாலை குறியீடுகள் தரப்படுத்தப்பட்டன. இந்த உடன்படிக்கை United
Nations Economic and Social Council ஆல் வியன்னாவில்
7 October 1968 to 8 November 1968 காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட
UNESC Conference on Road Traffic ஏற்றுக்கொள்ளப்பட்டு 6 June 1978
அமுலுக்கு வந்தது.,
நைரோபியில், ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் (United Nations Office at Nairobi, UNON) ஐநாவின் நான்கு முதன்மை அலுவலக வளாகங்களில் ஒன்றாகும். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் பல்வேறு ஐநா அமைப்புகளும் முகமைகளும் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இங்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், UN-HABITAT திட்டங்களின் தலைமையகம் அமைந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் தலைமையகம்,ஐக்கிய நடுகளின் குடிசார் அமைப்பு தலைமையகம்,ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு,பன்னாட்டு குடிமை வான் பயண நிறுவனம்,பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு,பன்னாட்டு கடல்சார் அமைப்பு,பன்னாட்டு நாணய நிதியம்,கூட்டு ஐக்கிய நாடுகள் HIV/ AIDSதிட்டம்,ஐக்கிய நாடுகள் மண்டல மேம்பாட்டு மையம்ஆப்பிரிக்க அலுவலகம்.,ஐக்கிய நாடுகள் மகளிர் மேம்பாட்டு நிதியம்,ஐக்கிய நாடுகள் வளர்ச்சி நிதியம்,ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், ஐக்கிய நாடுகள் மருந்துக்கட்டுப்பாடு திட்டம், ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல்,பண்பாட்டு நிறுவனம்,அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்,ஐக்கிய நாடுகள் தொழில் மேம்பாட்டு நிறுவனம்,ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம்,ஐக்கிய நாடுகள் பொதுவான் சேவைகள்,மனிதநேய விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்,திட்டப்பணிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம்,சோமாலியாவிற்கான ஐக்கிய நாடுகள் அரசியல் அலுவலகம், ஐக்கிய நாடுகள் மக்கள தொகை நிதியம்,உலக வங்கி,உலக உணவுத்திட்டம்,உலக சுகாதார அமைப்பு ஆகியன அமைந்துள்ளன.
இவை தவிர ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடைய பல அமைப்புகள் உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
கலப்படம் பெருகிவிட்ட இக்காலத்தில் நுகர்வோர் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கவிதைகளை , துணுக்குகளை,திரைப்படப்பாடல்களை,நாட்டுப்புறப் பாடல்களை,நாடகங்களை,சிறுகதைகளை,தொகுத்து இத்தளத்தில் விழிப்புணர்வுக்காக வெளியிட்டு பொதுமக்களுக்கு உதவிட உள்ளேன்.சமூக அக்கறை மற்றும் ஆர்வம் உள்ள சான்றோர் உதவிட வேண்டுகிறேன்.
CONCERT அமைப்பின் பெருமை சேர்க்கும் "அன்னம்" கையடக்க பரிசோதனை KIT
குறித்து விளக்கமளித்தார். உண்மையில் சிறிய விலையில், பல கலப்படங்கள்
கண்டுபிடிக்க உதவிடும் அருமையான கருவிகள். அத்துடன், நாம் பருகும் நீர்
தரமானதுதானா என பரிசோதிப்பது எப்படி என்பதையும் அதற்காக தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரியம் வடிவமைத்துள்ள பாட்டிலை கையாளும் விதம் குறித்தும்
விளக்கினார். பாமரரும் பயன்படுத்தும் விதத்தில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த KIT அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அரசின் மூலம் வழங்க CAI
எடுத்து வரும் முயற்சி பாராட்டிற்குரியது.
நன்றி http://www.unavuulagam.in வலைத்தளத்திற்கு....
கலப்படம்-நகைச்சுவை கவிதை
கேடு கெட்ட உலக வாழ்க்ககை வெறுத்ததால்
சாகவேண்டி தற்கொலை செய்ய முயற்சித்தான் முனுசாமி...
கடைக்கு சென்று தாம்புக் கயிறு வாங்கி
கதவடைத்து நாற்காலியின் மீதேறி....
உத்திரத்தில் சுருக்கிட்டு, தலையை உள்நுழைத்து
காலால் உதைத்தான் நாற்காலியை.....
அந்தோ... பரிதாபம் கயிறு அறுந்துவிட
முனுசாமி தரையில்விழுந்தான்.......
காரணம் கயிற்றில் கலப்படமாம்...!
மூட்டைப்பூச்சி மருந்து குடித்தால் சகலாம் -என்ற
ஒரு முதியவரின் அறிவுரை புத்தியில் மின்ன,
கடைக்குச் சென்று வாங்கி வந்து,
குளிர்பானம்போல் குடித்தான்...!
சிறு நேரம் வாந்தி, சிறிது நேரம் தலைச்சுற்றல்
ஆனால் அவன் சாகவில்லை....!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!
மற்றொரு முயற்சியாய் மண்ணெண்ணெய்
ஊற்றி முயற்சித்தான் முடிவு வழக்கம் போல்....
உடலில் தீக்காயம்.... மருந்திட
மருத்துவமனைக்கு வந்தான்....!
முதலுதவியின் போதே மூர்ச்சையானான்...
சீரிய சிகிச்சையில் செத்தே விட்டான்...!
காரணம் மருந்திலும் கலப்படமாம்...!
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் விவரம்.....
“Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995,
‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever
name described) which a drugh may not purport to prevent or cure or make
claims to prevent or cure”.
‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’
1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில
மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில
மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ,
‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது
என்று எச்சரிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின்
அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில
மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில்
ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51
நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.
ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் விவரம் வருமாறு.
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.
ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில்
பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள்
மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம்
சட்டப்பூர்வமாக எச்சரித்துள்ளது. இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு
மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
இன்னும் தொடரும் என அன்பன்...
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
பியூரோ ஆப் இந்தியன் ஸ்டேண்டேர்டு BIS - BUREAU OF INDIAN STANDARDS என்னும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தங்கம்,வெள்ளி போன்ற ஆபரணத்திற்கான தரச்சான்று வழங்கும் தரநிர்ணய முத்திரை பற்றி காண்போம்.தங்கம் ஆபரணத்திற்கு BIS - HALLMARK என்னும் தரச்சான்று முத்திரை வழங்கப்படுகிறது.இது ஐந்து முத்திரைகளைக்கொண்டு இருக்க வேண்டும்.இந்த ஐந்து முத்திரைகளில் ஒன்று குறைந்தாலும் தரச்சான்று பெற்றதாக கருதமுடியாது.
(1)BIS Mark - LOGO -இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை
(2)Fineness Grade -தங்கத்தின் தூய்மைத் தன்மை (நேர்த்தி தன்மை)
(அ) purity carat என்று பதிவிட்டிருந்தால் -24 காரட் தங்கம் எனவும்,
(ஆ) 958 என்று பதிவிட்டிருந்தால் 23 காரட் தங்கம் எனவும்,
(இ) 916 என்றால் 22காரட் தங்கம் எனவும்,
(ஈ) 875என்றால் 21 காரட் தங்கம் எனவும்,
(உ) 750 என்றால்18காரட் தங்கம் எனவும்,
(ஊ) 708என்றால் 17காரட் தங்கம் எனவும்,
(எ) 585 என்றால்14 காரட் தங்கம் எனவும்,
(ஏ) 417 என்றால் 10காரட் தங்கம் எனவும்,
(ஐ) 375 என்றால் 9 காரட் தங்கம் எனவும்,
(ஒ) 333 என்றால் 8காரட் தங்கம் எனவும் தெரிந்துகொள்ளுங்க.,
(3) Assaying & Hallmark Centre's Mark - ஹால்மார்க் மையத்தின் முத்திரை
(4)Year of Marking - முத்திரையிடப்பட்ட ஆண்டுக்கான குறியீடாக ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது
A எழுத்து பதிவிட்டிருந்தால் -2000 வது ஆண்டினையும்,
B எழுத்து-2001 வது ஆண்டையும்,
C எழுத்து-2002 வது ஆண்டையும்,
D எழுத்து-2003 வது ஆண்டையும்,
E எழுத்து-2004 வது ஆண்டையும்,
F எழுத்து-2005 வது ஆண்டையும்,
G எழுத்து-2006 வது ஆண்டையும்,
H எழுத்து-2007 வது ஆண்டையும்,
I எழுத்து-2008 வது ஆண்டையும்,
J எழுத்து-2009 வது ஆண்டையும்,
K எழுத்து-2010 வது ஆண்டையும்,
L எழுத்து-2011 வது ஆண்டையும்,
M எழுத்து-2012 வது ஆண்டையும்,
N எழுத்து-2013 வது ஆண்டையும்,
O எழுத்து-2014 வது ஆண்டையும்,
P எழுத்து-2015 வது ஆண்டையும்,
Q எழுத்து-2016 வது ஆண்டையும்,
R எழுத்து-2017 வது ஆண்டையும்,
S எழுத்து- 2018 வது ஆண்டையும்,
T எழுத்து-2019 வது ஆண்டையும்,
U எழுத்து-2020 வதுஆண்டையும்,
V எழுத்து-2021 வதுஆண்டையும்,
W எழுத்து-2022 வது ஆண்டையும்,
X எழுத்து-2023 வது ஆண்டையும்,
Y எழுத்து-2024 வது ஆண்டையும்,
Z எழுத்து- 2025 வது ஆண்டையும்.
தெரிவிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்க.
(5) jeweller's Identification Mark -ஆபரண விற்பனையாளரின் அடையாள முத்திரை
ஆக மொத்தம் ஐந்து அடையாளங்கள் இருக்க வேண்டும்.
இன்னும் தொடரும்....
என சமூக நலனில்
அக்கறையுள்ள அன்பன்,