Friday, 25 July 2014

மரியாதைக்குரியவர்களே,
                      வணக்கம்.பெண்களுக்கு உதவும் எண்கள்.

       தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். 4423452365,1091:இந்த எண் பயன்பாடு   திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்புகொள்ளலாம்! இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! 
             பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்!
         பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155:
குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.
04426530504, 26530599:
மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்!    மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424:
வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.
04425353999, 90031 61710:
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
95000 99100:
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
04424749002, 04426744445:
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
04428592828, 94454 64748:
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான டோல் ஃப்ரீ எண் 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.
93833 37639:
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
மாற்றம்வேண்டும்..மாற்றவேண்டும்..
மாற்றத்திற்கு தோள்கொடுப்போம்....
நன்றி;
https://www.facebook.com/pages/Loksatta-Party-Madurai-District/474034309363000
லோக்சத்தா கட்சி மதுரை மாவட்டம்....


சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறை...
இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதி நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது பேப்பரில் தயாராகும் மூவர்ண தேசியக் கொடிகளையே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறையின் பொதுப்பிரிவு இயக்குனர் சியாமளாமோகன் இது தொடர்பாக எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அரசு மற்றும் தனியார் நடத்தும் முக்கிய விழாக்களில் பேப்பர் தேசியக் கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக்கில் தயாராகும் தேசியக் கொடிகளை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் தேசியக் கொடிகள் எளிதில் மக்காது. இதனால் சுற்றுச்சூழல் மாசு பாதிப்பு ஏற்படும்.
மேலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை கவுரவமான முறையில் அகற்றுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. எனவே அனைத்து விழாக்களிலும் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது.
பேப்பர் தேசியக் கொடிகளை பயன்படுத்த மக்களிடம் மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் தேசியக் கொடியை விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது தேசிய கவுரவம் இழிவு படுத்தப்படுவதை தடுக்கும் சட்டம்–1971–ன் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிளாஸ்டிக் தேசிய கொடியை பயன்படுத்துபவர்கள் மீது 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்க முடியும்.



                பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா ? சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.... நன்றி : உழவன்


தங்கநகை வாங்கப்போகிறீர்களா?
ஹால்மார்க் என்பது ஆபரணத்தங்கத்தில் உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான அதிகாரப்பூர்வ முத்திரை.நகைகளின் தரத்தை உறுதிசெய்யும்பொருட்டு இந்திய தரநிர்ணய அமைவனம்(BIS) 2000 ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் வாங்குவதன் மூலம் மாற்றுக்குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கலாம்.
• ஹால்மார்க் தரமுத்திரைத்திட்டம் கட்டாயம் இல்லை.விண்ணப்பிக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.(BIS Act 1986)
• சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள்தான்.நாம்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்.
• ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகள் சிறியதாக இருந்தாலும் அதில் ஐந்து முத்திரைகள் இருக்கும்.1.பி.ஐ.எஸ் முத்திரை,2.நேர்த்தித்தன்மை முத்திரை,3.அஸேயிங்& ஹால்மார்க் மையத்தின் முத்திரை,4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு.5.நகை விற்பனையாளர் முத்திரை.
• ஹால்மார்க் உரிமம் பெற்ற விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி வைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நாம் நகை வாங்கும்போது பூதக்கண்ணாடி கேட்டுவாங்கி 5 முத்திரைகளையும் சரிபார்த்து வாங்கவேண்டும்.
• நகைகளில் 916 அல்லது 916&KDM அல்லது 916&BIS முத்திரை மட்டுமே இருந்தால் அது உண்மையான ஹால்மார்க் முத்திரை அல்ல!5 முத்திரைகள் இருக்கவேண்டும்.
• கேரட் மீட்டர்கள் மேற்புற சுத்தத்தனமையை மட்டுமே சோதித்துக்காட்டும்.(20 மைக்ரான் அளவு மட்டுமே).இதை முழுமையாக நம்பவேண்டாம்.
• 916(22காரட்) மட்டுமே ஹால்மார்க் என்பதில்லை.958-23காரட்,916-22காரட்,875-21காரட்,750-18காரட்,708-17காரட்,585-14காரட்,375-9காரட் இவ்வாறு அனைத்து நகைகளிலும் ஹால்மார்க் முத்திரை உண்டு.
• கேடியம்(KDM) என்பது கேட்மியம் மோனாக்ஸைடு உலோகத்தைக்குறிக்கிறது.சுத்தமானது என்றோ நேர்த்தியானது என்றோ பொருள் அல்ல.
• நகை செய்யும்போது எளிதாக தங்கத்தை பற்றவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொடிதான் கேட்மியம்.
• கேட்மியம் பயன்படுத்துவது புற்றுநோய்வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் சேர்க்க அனுமதி இல்லை.கேடியம் சுத்தமானது என்று எண்ணி ஏமாறவேண்டாம்.
• ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் விலை அதிகம் என்பது உண்மையல்ல!எவ்வளவு எடை கொண்ட நகையானாலும் ஹால்மார்க் முத்திரை பெற 18 ரூபாய் மட்டுமே செலவாகிறது.
• தங்கநகை வாங்கும்போது வியாபாரி தரும் எஸ்டிமேட் மட்டுமே வாங்காமல் முறையான பில்வாங்கவேண்டும்.
ஹால்மார்க் நகைகளில் குறை இருந்தால் பி.ஐ.எஸ் நிறுவனத்தில் புகார் தெரிவிக்கலாம்.
நன்றி : INDIAN CONSUMER & HUMAN RIGHTS FOUNDATION

Monday, 21 July 2014

காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலத்தில் கண் தான விழிப்புணர்வு முகாம்.

மரியாதைக்குரியவர்களே,
                             வணக்கம்.



       சத்தியமங்கலம்,காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு முகாம்.
  சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கமும்,சத்தியமங்கலம் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடும் இணைந்து காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் வைத்து21.7.2014அன்று காலை கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தினார்கள்.
         இந்த முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் திருமதி P.அருந்ததி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி  துவங்கி வைத்தார்.கல்லூரியின் தாளாளர் திரு.R.பெருமாள்சாமி அய்யா அவர்கள் தலைமை தாங்கினார்கள்.கல்லூரியின் மாணவி செல்வி.A.ரோகிணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.KGR மருத்துவமனை Dr.K.G.ரங்கநாதன் அவர்களும்,கல்லூரியின் முதல்வர் திரு.K.செந்தில்குமார் அவர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர். திரு.C.பரமேஸ்வரன் அவர்களும்,ஒருங்கிணைப்பாளர் Lion.K.லோகநாதன் அவர்களும்,தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும்,கல்லூரியின் இணை செயலாளர் திருமதி.P.மலர் செல்வி அவர்களும்,சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா.K.ராஜ்குமார் அவர்களும்,செயலாளர் அரிமா.A.உலகராஜ் அவர்களும்,பொருளாளர் அரிமா,V.ஞானஸ்கந்தப்பன் அவர்களும் முன்னிலை வகித்தார்கள்.
                 சிவகாசி அரிமா சங்க பட்டய தலைவரும்,கண் தான மாவட்ட தலைவருமான  அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.கண் தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.கண் தான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும்,ஸ்டிக்கர்களும் விநியோகிக்கப்பட்டன.

            கண்தான மாவட்ட தலைவர் அரிமாDr.J.கணேஷ் MJF அவர்கள் கூறுகையில் அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு.கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம்.இத்தகைய இருண்ட உலகத்தில் வாழ்பவர்களுக்கு ஒளிவிளக்காக  கிடைத்ததுதான் கண் தானம்.மனிதர்களுக்கு மரணம் உண்டு.ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை.எனவே மரணத்திற்குப்பிறகுஅனைவரும் கண் தானம் செய்யலாம்.கண்ணின் கருவிழியின் பாதிப்பால் ஏறக்குறைய 68லட்சம் இந்தியர் முற்றிலும் கண்ணொளி இழந்துள்ளனர்.மறைந்தவர் தானமாக கொடுக்கும் கண்களை கொண்டுஇவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.ஆனால் நாம் ஆண்டுதோறும் பெறும் கண் கருவிழிகளோ  சில ஆயிரங்களே.சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார்.

 கண்தான விழிப்புணர்வு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் மாணவ,மாணவியர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் உறுப்பினர்களும்,ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.முகாமில் பங்கு பெற்ற மாணவ,மாணவிகளுக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.முகாமின்போது தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,பயணிகள் பாதுகாப்பு சங்கம் ஆகிய சமுக நலனுக்கான அமைப்புகள் துவங்கப்பட்டன.


             அரிமா Dr.J. கணேஷ்MJF அவர்களுக்கு '' தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்'' சார்பாக ''கண்தான வழிகாட்டி - விருது'' வழங்கி கௌரவிக்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சிறப்பாக செய்து இருந்தனர்.கல்லூரியின் மாணவி செல்வி.J.பெனசிர் ரிஸ்வானா அவர்கள் நன்றி கூற முகாம் இனிதே நிறைவடைந்தது.

மாலை 3.30 மணியளவில் ''பார்வைக்கோர் பயணம்'' கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கமும்,நாட்டு நலப்பணித் திட்ட மாணவ,மாணவியரும் கலந்து கொண்டனர்.பேரணியை சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்& ஒழுங்கு)அவர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் மற்றும் அரிமா.K.லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தனர்.பேரணி சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன்பு துவங்கி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது.

Friday, 18 July 2014

கண் தானம் மற்றும் கண்கள் பாதுகாப்பு முகாம்.

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மஞ்சள் நகரமாம் ஈரோடு மாவட்டத்தின் சந்தன நகரமாம் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் கல்விக்கொடை வள்ளலாம் காமராசர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தின் பட்டாஸ் நகரமாம் சிவகாசி அரிமா கண் தான மாவட்ட தலைவர் விழிக்கொடை வள்ளல் மதிப்பிற்குரிய அரிமா Dr.J.கணேஷ் MJFஅவர்களது கண்தானம் பற்றிய கருத்தரையை கேட்டு விழிப்புணர்வு பெற அனைவரும் வருக.....

தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் துவக்க நிகழ்ச்சி.21-07-2014அன்று.


பயணிகள் பாதுகாப்பு சங்கம் - துவக்க நிகழ்ச்சி.21-07-2014 அன்று.


அனைவரையும் வரவேற்கும் அன்பன்,

Thursday, 10 July 2014

கண்கள் பாதுகாப்பு கண்தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு.



 மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
 கண்களை பாதுகாப்போம்.                    கண்தானம் செய்வோம்.
             அன்புடன் அழைக்கிறோம்.அனைவரும் வாங்க,கண்கள் பாதுகாப்பு &கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுக.வருகிற 2014 ஜூலை மாதம் 21 ஆம் தேதி அன்று நம்ம ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் அகில உலக அரிமா கண்தான மாவட்டம்,சிவகாசி பட்டாஸ் நகர்,காமதேனு கலை அறிவியல் கல்லூரி,ரோட்டராக்ட் கிளப் இவர்களுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து நடத்தும் கண் தானம் கருத்தரங்கு மற்றும் பேரணி நிகழ்ச்சிங்க.அதன் 
           நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ் இதுங்க......
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் இதோ தங்களது பார்வைக்கு......