மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறோம்.நெகிழி என்னும் பிளாஸ்டிக் தீமைகள் பற்றி கோஷங்கள் இந்த பதிவில் காண்போம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்-வனப்பகுதியில் நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்-சுற்றுச்சூழலை காப்போம் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கான மூன்று நாட்கள் இயக்கத்தில் எழுப்பிய கோஷங்களின் தொகுப்பு.
(1)அடுத்த தலைமுறைக்கு இயற்கைவளங்களை குன்றாமல் விட்டுச்செல்வோம்.
(2)இயற்கை வளங்களே தெய்வம்.
(3)இன்றைய குறிக்கோள் இயற்கை வளங்களை காப்பதே.
(4)இயற்கை வளங்களே நம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் சொத்து.
(5)உலக நன்மயை நினைப்போம்.
(6)உருவாக்கும் குப்பைகளை குறைப்போம்.
(7)ஒருமுறை பயன்பாடு நெகிழிகளை தவிர்ப்போம்.
(8)ஒருமுறை நெகிழி பயன்பாடு,உணர்ந்திடுவீர் அதன் கேடு.
(9)வனங்களே பூமியின் நுரையீரல்.
(10)இந்திய அரசு வெளியிட்டுள்ளநெகிழி பொருட்களை கட்டுப்படுத்தும் சட்ட விதிகளை கடைப்பிடிப்போம்.
(11)சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு கொள்வோம்.
(12)நெகிழ பொருட்களின் தீமைகள் தெரிந்துகொள்வோம்.
(13)வன வளம் காப்போம்,மழை வளம் பெறுவோம்.
(14)தவிர்ப்போம்,குறைப்போம்,மீண்டும் பயன்படுத்துவோம்,மறு சுழற்சிக்கு உட்படுத்துவோம்-தாரக மந்திரத்தை கடைப்பிடிப்போம்.
(15) பாலித்தீன் பைகளை வீசி எறிந்தால் அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு.
(16)சாக்கடையை நெகிழியை போட்டு குப்பைத்தொட்டி ஆக்காதீர்.
(17)காடுகளை அழியாமல் பாதுகாப்போம்,காற்றினை மாசின்றி பெறுவோம்.
(18)துணிப்பை மற்றும் காகிதப்பைகளை பயன்படுத்துவோம்.
(19)பாலித்தீன் பைகளில் பார்சல் கட்டாதீர்,பலவித நோய்களுக்கு ஆளாகாதீர்.
(20)பாலித்தீன் பைகள் பயன்பாடு,பலவித நோய்கள் வரும் பாரு.
(21)துணிப்பை என்பது எளிதானது.தூர எறிந்தால் உரமாகும்,
நெகிழி என்பது அழகானது வீசி எறிந்தால் விஷமாகும்.
(22)நாகரீகத்துக்கான நெகிழி பயன்பாடு
நமக்கு வருவதோ பெரும் கேடு.
(23)நெகிழி குப்பைகளை எரிக்காதீர்,
நச்சு வாயுக்களை பரப்பாதீர்.
(24)பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யாதீர்,
புற்று நோய்களுக்கு ஆளாகாதீர்.
(25)இனியாவது உணர்ந்திடுவோம்,
இயற்கை வளங்களை காத்திடுவோம்.
(26)காடுகளை அழியாமல் காத்திடுவோம்,
காற்றினை மாசின்றி பெற்றிடுவோம்.
(27)வனங்களே பூமியின் நுரையீரல்,
(28)மானிடரே விழித்திடுவீர்,மக்கும் பொருட்களை பயன்படுத்திடுவீர்,
(29)வனம் அழிந்தால் மனித இனம் அழியும்,
(30)வனம் காப்போம்,நாட்டின் வளம் காப்போம்.
(31)குப்பைகள் நம்மால் உருவாக்கப்படுகின்றன.உணர்ந்திடுவீர்.
(32)பசுமைச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை
பல்லாண்டு வளமான வாழ்க்கை,
(33)நம் இருப்பிடமே சூழல் மாசு அடைய பிரதானம்.
(34)பசுமை வாழ்க்கை,கார்பன் சார்ந்த வாழ்க்கை பாகுபாடு கண்டிடுவீர்.
(35)சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருப்பீர்,
தேவையற்ற பொருட்களை தவிர்ப்பீர்.
(36)மின்சாரமே பெரும் பங்கு கார்பனை வெளியிடுகிறது.
(37)துணிப்பைகளை பயன்படுத்துவோம்,பாலித்தீன் பைகளை தவிர்ப்போம்.
(38)பயன்படுத்திய பொருட்களையே மீண்டும்,மீண்டும் பயன்படுத்துவோம்.
(39)தாவரங்களே காற்றினை சுத்தம் செய்ய படைக்கப்பட்டவை.
(40)வேதிப்பொருட்கள் பயன்பாட்டினை நிறுத்துவோம்.
வேதனைகளை தவிர்ப்போம்.
(41)வீட்டு உபயோகப்பொருட்கள் வெளியிடும் ஆக்ஸைடு, சூழலுக்கு தீங்கானது.
(41)சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை கொள்வோம்.
(42)சாக்கடையை குப்புத்தொட்டி ஆக்காதீர்.
சுகாதார கேடு உருவாக்காதீர்.
(43)வனத்தை காப்போம்,வறட்சியை தடுப்போம்.
(44)நெகிழி தவிர்ப்போம்,கெடுதி தவிர்ப்போம்.
(45)வனமே இயற்கையை சேமிக்கும் சொத்து.
(46)வனமே பசுமையை காக்கும்.
(46)மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம்.
(47)மழைநீர்த்தொட்டி அமைப்போம்,நிலத்தடி நீர் சேமிப்போம்.
(48)வற்றாத இயற்கைவளங்களே நம் குழந்தைகளுக்கு சேர்த்துவைக்கும் சொத்து.
(49)கார்பன் குறைப்போம்,புவி வெப்பமயமாதலை தவிர்ப்போம்.
(50)மெல்லக்கொல்லும் விஷமாகும் நெகிழியின் பயன்பாடு.
சமூக நலன் கருதி,
அன்பன்
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.
தொடர்புக்கு #9585 600733 (குறுந்தகவல் அனுப்பலாம்)
(2421-பார்வை)
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு''- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இயக்கம்.
''நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களை தவிர்ப்போம்-
சுற்றுச்சூழலை காப்போம்''
''வன வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''
மூன்று நாட்கள் விழிப்புணர்வு இயக்கம்.
(27ம் தேதி முதல் 29ம் தேதி வரை-டிசம்பர்-2013)
தமிழ்நாடு அரசு-வனத்துறை-(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்),
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்(ஈரோடு மாவட்டம்),
காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்
இணைந்து நடத்தும்
நோட்டீஸ் பிரச்சாரம்,வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம்,பேரணி,களப்பணி,கருத்தரங்கம்,பொதுக்கூட்டம்.
'' நெகிழி ( பிளாஸ்டிக்) பொருட்கள் தவிர்ப்போம்.
சுற்றுச்சூழல் காப்போம்''.
முதல் நாள்
முதல் நிகழ்வு;
அறிமுகக் கூட்டம்.
நாள்;27-12-2013, நேரம்;காலை 9-30 மணி,
இடம்; மாவட்ட வன அலுவலகம்- சத்தியமங்கலம் கோட்டம்,.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.
வரவேற்புரை;-
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்-
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
தலைமை ஏற்று அறிமுக உரை;
திரு.K.ராஜ்குமார் அவர்கள்,
மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர்
சத்தியமங்கலம் கோட்டம்,.(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
அறிமுக உரை தலைப்பு;
''வன வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''
முன்னிலை;-
திரு.S.சண்முகம் அவர்கள் வனச்சரக அலுவலர்,
சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகம்-.
(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
அரிமா S.K.பொன்னுசாமி (S.P.S) அவர்கள்-தலைவர்
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்.
திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
Dr.S. மோகன்தாஸ் M.Sc.,M.Phil.,Ph.D. அவர்கள் முதல்வர்-
காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்.,
வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன்B.A.B.L., அவர்கள்
சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
(சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
.அரிமா K லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்
(லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
துவக்கவுரை;-
அரிமா S.K.பொன்னுசாமி (S.P.S) அவர்கள்-தலைவர்
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்.
நன்றியுரை;அரிமா.K.. லோகநாதன் அவர்கள்,
ஒருங்கிணைப்பாளர்
(லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
இரண்டாம் நிகழ்வு;
கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி.
பேரணி துவக்கி வைப்பவர்;
திரு.K.ராஜ்குமார் அவர்கள்,
மாவட்ட வன அலுவலர் மற்றும்துணை இயக்குனர். சத்தியமங்கலம் கோட்டம்,
.(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
நோட்டீஸ் பிரச்சாரம் துவக்கி வைப்பவர்;
அரிமாS.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் துவக்கி வைப்பவர்;-
வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள் .
சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
(சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
பேரணியில் பங்கேற்பு;
கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
சத்தியமங்கலம்.,
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.
மூன்றாம் நிகழ்வு;
வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம்
மற்றும் நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம்.
======================================================================
இரண்டாம் நாள்
முதல் நிகழ்வு;
விழிப்புணர்வுக் கூட்டம்.
நாள்;28-12-2013, நேரம்;காலை 9-00மணி
இடம்;மாவட்ட வன அலுவலகம்- ஆசனூர் கோட்டம்,.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.
வரவேற்புரை;-
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்-
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
தலைமையுரை;-
திரு.P.பாரி அவர்கள்,
மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர்
ஆசனூர் கோட்டம்,.(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
முன்னிலை;-
திரு.சித்தையன் அவர்கள் வனச்சரக அலுவலர்,
ஆசனூர் வனச்சரக அலுவலகம்-.
(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
அரிமா K லோகநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர்
(லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்)
அரிமா S.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்
திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
திரு.S.ரவி அவர்கள், துணைத் தலைவர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
வழக்கறிஞர் S.L.வெங்கடேஸ்வரன் B.A.B.L.,அவர்கள் . சட்ட ஆலோசகர் மற்றும் தலைவர்
(சத்தி வட்ட வழக்கறிஞர்கள் சங்கம்)
துவக்கவுரை;-
அரிமா S.V.சிவசங்கர் அவர்கள்,செயலாளர்,
அரிமா சங்கம்-சத்தியமங்கலம் நகரம்,
வாழ்த்துரை;-
நிலைய அலுவலர் அவர்கள்,
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை-
தீயணைப்பு நிலையம்
ஆசனூர்-(தாளவாடி ஒன்றியம்)
திரு. ரமேஷ் அவர்கள்,
உடற்கல்வி ஆசிரியர்-
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி-
ஆசனூர்.
திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்
காவல் நிலையம்-ஆசனூர்.
திரு.T.ஆறுமுகம் அவர்கள்,கிளை மேலாளர்-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-
தாளவாடி கிளை-ஈரோடு மண்டலம்.
நன்றியுரை;திரு.V.ராஜன் அவர்கள், துணை செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
இரண்டாம் நிகழ்வு;
களப்பணி துவக்கம்.
இடம்; ஆசனூர் மாவட்ட வன அலுவலகம்
(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்)
களப்பணி துவக்கி வைப்பவர்; திரு.P.பாரி அவர்கள்,
மாவட்ட வன அலுவலர் மற்றும்துணைஇயக்குநர்
ஆசனூர் கோட்டம்,
.(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
களப்பணியில் பங்கேற்பு;
கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
சத்தியமங்கலம்.,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.
மூன்றாம் நிகழ்வு;
வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் மற்றும்
நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம்.
நான்காம் நிகழ்வு;
கருத்தரங்கம்
இடம்;கொங்கள்ளி கோவில் வளாகம். நேரம்;மாலை,5-00மணி
தலைப்பு;
''நெகிழி(பிளாஸ்டிக்)பொருட்கள் பயன்பாடும்-வனவளம் பாதிப்பும்''
''வனம் வளம் காப்போம்-மனித இனம் காப்போம்''
======================================================================
மூன்றாம் நாள்.
முதல் நிகழ்வு;-
களப்பணி
நாள்;29-12-2013, நேரம் ;காலை;8-00மணி
இடம்;ஸ்ரீமல்லிகார்ஜூனா கோவில் வனப்பகுதி- கொங்கள்ளி.
களப்பணி துவக்கி வைத்து மேற்பார்வை;
திரு.S.M.உதயராஜ் அவர்கள்,வனச்சரக அலுவலர்,
தாளவாடி வனச்சரகம்,
ஆசனூர் கோட்டம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்.
களப்பணியில் பங்கேற்பு;
(1) கல்லூரி மாணவ,மாணவியர், மற்றும் பேராசிரியர்கள்,
காமதேனு கலை அறிவியல் கல்லூரி-
சத்தியமங்கலம்.,மற்றும்
(2)வனத்துறையினர்,தாளவாடி வனச்சரகம்,
(3) நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு
(4)கிராம வனக்குழு உறுப்பினர்கள்-கெட்டவாடி,
(5) ஊர்ப் பொதுமக்கள் (ஆர்வமுள்ளவர்கள்) தாளவாடி ஒன்றியம்.
+++++++++++++++++++++++++++
இரண்டாம் நிகழ்வு;-
நிறைவு நாள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்.
இடம்;பேருந்து நிலையம்-பனகஹள்ளி
(பையனாபுரம் ஊராட்சி)
நேரம்;மாலை;4-00மணி,
வரவேற்புரை; திரு.M.R.சுப்பண்ணன் அவர்கள்,
கிராம வனக்குழு தலைவர்-கெட்டவாடி.
தலைமையுரை;திருமதி;S.ராணி சுப்பண்ணன் அவர்கள்,
ஊராட்சி மன்றத் தலைவி,
பையனாபுரம் ஊராட்சி மன்றம்.
முன்னிலை,திரு.K.சிவக்குமார் அவர்கள், ஊராட்சி மன்றத் துணை தலைவர்,
பையனாபுரம் ஊராட்சி மன்றம். திரு.S.M.உதயராஜ் அவர்கள்,
வனச்சரக அலுவலர்,
தாளவாடி வனச்சரகம்,
ஆசனூர் கோட்டம்,
(சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்).
திரு ஆறுமுகம் அவர்கள்,
துணை வட்டாட்சியர்,தாளவாடி.
திரு.A.A.ராமசாமி அவர்கள்,தலைவர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
அரிமா.K.லோகநாதன் அவர்கள்-ஒருங்கிணைப்பாளர்
(லோகு டிரைவிங் ஸ்கூல்)-சத்தியமங்கலம்.
நோக்கம்;
திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
பாராட்டுரை;
திரு. வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள்,
வட்டார வளர்ச்சி அலுவலகம்.
திரு. நஞ்சுண்ட நாயக்கர் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தலைவர்,
தாளவாடி ஊராட்சி மன்றம்,
திரு.G.C.பட்டி மல்லப்பா அவர்கள்,
ஜீரகனஹள்ளி
திரு. வெங்கட்ராஜ் அவர்கள்,
முதல்வர் மற்றும் நிர்வாகி,
J.S.S.தொழிற்பயிற்சி நிலையம்-தாளவாடி.
திரு.P.யேசுதாசன் M.Com.,அவர்கள்,
திட்ட ஒருங்கிணைப்பாளர்-(PALM2 N.G.O)தாளவாடி.
திரு.M. சிவசாமிM.A. அவர்கள்,
முன்னாள் தலைவர் ,Y'SMEN CLUB OF THALAVADY.
திரு.R.ராஜம்மா அவர்கள்,
உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்.
திரு. வியானி அவர்கள், ரோட்டரி கிளப் ஆப் தாளவாடி.
திரு.A.பாபு அவர்கள்-பனகஹள்ளி,
திரு.பாதிரியார் அவர்கள்,பனகஹள்ளி சர்ச்.
நிறைவுரை;
திரு.R.மாதேஸ் M.A.B.Ed.,அவர்கள்,
தலைமை ஆசிரியர்-
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி- தாளவாடி.
நன்றியுரை.
திரு.V.பாலமுருகன்,B.B.A., அவர்கள், பொருளாளர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
மழைநீர்த்தொட்டி அமைப்போம்-நிலத்தடி நீர் சேமிப்போம்.
மரம் வளர்ப்போம்-மழை பெறுவோம்.
இயற்கை வளங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்வோம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு;
பரமேஸ்வரன்.C.
செயலாளர்
,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.
.தொடர்புக்கு;
#9585600733
மின்னஞ்சல் முகவரி;
consumerandroad@gmail.com.
===================================================================
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013.வலைப்பதிவுக்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தாளவாடி கொங்கள்ளி கோவில் சுற்றுப்புறம் மற்றும் வனப்பகுதியில் விழிப்புணர்வு இல்லாத மக்களால் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பேப்பர்,பாட்டில்களை அப்புறப்படுத்திவிட்டு ''வனத்தை காப்போம்-பிளாஸ்டிக் தவிர்ப்போம்'' என்ற தலைப்பில் கருத்தரங்கம்-விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்-பொதுக்கூட்டம்-கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அழிப்பது.போன்ற சமுதாய நலனுக்கான இரண்டு நாட்கள் சேவை செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளிடமும் ,வனத்துறையினரிடமும் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.வருகிற 2013 டிசம்பர்21 மற்றும் 22 ம் தேதிகளில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.சுமார் ஐநூறுக்கும் அதிகமான நபர்களை திரட்டி செயல்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
12/8/2013 இன்று முதல் அவ்வப்போது இங்கு பதிவிட்டு தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும்.தங்களது மேலான ஆலோசனைகளை தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என
C.பரமேஸ்வரன்,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.(பதிவு எண் #26/2013)