Monday, 7 October 2013

சைக்கிள் பேரணி-அக்டோபர் ஏழாம் நாள்


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
      வணக்கம்.
                    ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''காந்தியடிகள் பிறந்த நாள்விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் -ஏழாம் நாள் இன்று
             சத்தியமங்கலம் -அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு  கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபிசெட்டிபாளையம் மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணியை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் சட்ட ஆலோசகரும் சத்தியமங்கலத்தின் வழக்கறிஞர்கள் சங்க தலைவருமான வழக்கறிஞர்.S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின்ஒருங்கிணைப்பாளர் அரிமா K.லோகநாதன் அவர்கள் முன்னிலை வகித்து வாழ்த்தி வழியனுப்பினார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்கள் ,துணை தலைவர் திரு.S.ரவி அவர்கள் செயலாளர் திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் மாணவர்கள் பேரணியுடன் கோபி சீதா கல்யாண மண்டபம் வரை சென்றனர். கோபி கலைஅறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களான திரு.K.ராஜேந்திரன் - அவர்கள் Social Service Leage சமுதாய சேவை கூட்டமைப்பு-திட்ட அலுவலர் மற்றும் உதவிப் பேராசிரியர் Dr.M.சுந்தரமூர்த்தி அவர்கள் National Service Scheme நாட்டு நலப்பணித் திட்டம்-திட்ட அலுவலர் அவர்கள் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பிற்காக உடன் சென்றனர்.


    சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு காலை எட்டு மணிக்கு தயாராக உள்ள காட்சி.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்  அரிமா.K.லோகநாதன் அவர்கள்,சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்.S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள்,தலைவர்திரு. A.A.இராமசாமி அவர்கள்,துணை தலைவர் S.ரவி அவர்கள் அருகில் உள்ளனர்.



                  மாணவர்கள் சைக்கிள் பேரணிக்கு, ஒருங்கிணைப்பாளர்.அரிமாK.லோகநாதன் அவர்கள் முன்னிலை வகிக்க - வழக்கறிஞர்S.L.வெங்கடேஸ்வரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.



  கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி உற்சாகப் பயணம் சத்தியமங்கலத்திலிருந்து (முப்பது கிலோமீட்டர்).கோபி சீதா கல்யாண மண்டபம் வரை.

 

                       சைக்கிள் பயண மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறார்.திருமதி அம்மையார் அவர்கள் A.A. ராமசாமி தலைவர் அவர்களின் துணைவியார்.அனைவரின் காலை சிற்றுண்டி செலவு தலைவர் அவர்கள் பெறுப்பேற்றார்.

                   காலை உணவு அளிக்கும் பொறுப்பேற்ற தலைவர் திரு.A.A.இராமசாமி அவர்களும் அவரது துணைவியார் திருமதி அம்மையார் அவர்களும்.அருகில் துணை தலைவர் S.ரவி அவர்கள்.
                    கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பிற்காக பொறுப்பேற்று சைக்கிள் பேரணி உடன் சென்ற கோபி கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியப் பெருமக்கள் இருவரும் சூழ்நிலை கருதி மரத்தடியிலேயே  சிற்றுண்டி அருந்தி மாணவர்களுக்கு ஊக்கமளித்த காட்சி.
                         சைக்கிள் பேரணி இரு கல்லூரி மாணவர்களுக்கு கொடிவேரி அணைக்கட்டு  வாயிலின் முன்புதிரு.சிதம்பரம் அவர்கள் (எலத்தூர் கிராமம்) குளிர் பானம் கொடுத்து வாழ்த்திய காட்சி.
              எலத்தூர் கிராமம்  திரு.சிதம்பரம் அவர்களின் தனி மனித ஆர்வத்தை பாராட்டிய கோபி கல்லூரி உதவிப் பேராசிரியர்களும்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும்,துணை தலைவரும் அருகில்  கல்லூரி மாணவர்கள்.
                    கோபி- காசிபாளையத்தில் திரு.செல்வம் அவர்கள் குடும்பத்தாருடன் பண்ணாரி அம்மன் போட்டோ ஸ்டுடியோ அவர்கள் குளிர்பானம் கொடுத்து வாழ்த்திய காட்சி.
                      சத்தியமங்கலத்தில் புறப்பட்டு வந்த இரு கல்லூரி மாணவர்களைகோபி கலை அறிவியல் வாயில் முன்பு கல்லூரி முதல்வர் சார்பாக வரவேற்று வாழ்த்திய காட்சி.அருகில் உதவிப் பேராசிரியர் திரு.K.ராஜேந்திரன் அவர்கள் ,உதவிப் பேராசிரியர்Dr.M. சுந்தரமூர்த்தி அவர்கள் மற்றும் சத்தியமங்கலம்- காமதேனு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு.T.சரவணன் அவர்கள்,தலைவர் திரு. A.A.இராமசாமி அவர்கள்,துணை தலைவர்S. ரவி அவர்கள்.
       சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நிறைவு செய்த இருகல்லூரி மாணவர்களை கோபி அச்சக உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் வரவேற்று உபசரித்தனர். உற்சாகம் மிகுதியுடன் கல்லூரி மாணவர்கள், இரு கல்லூரி உதவிப் பேராசிரியப் பெருமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பொறுப்பாளர்கள்.



          கோபி அச்சக உரிமையாளர்கள்ஒருங்கிணைப்புக் குழு-கோபி செட்டிபாளையம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு(பதிவு எண்:26/2013)ஆகியோர் அனைவரின்  மதிய உணவு பொறுப்பேற்றனர்.
       என
அன்புடன்
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;26/2013



Sunday, 6 October 2013

வாகன ஒலிபெருக்கி விழிப்புணர்வு பிரச்சாரம்



Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். போதைப்பொருட்களை தவிர்ப்போம்
    வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் தங்களது கவனத்திற்காக..















































வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம்-

Dispense drugs - and save ourselves

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
   ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா ஒருவார விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்காக வாகன ஒலி பெருக்கி மூலம்  கோபி செட்டிபாளையம் ஒன்றியம்,நம்பியூர் ஒன்றியம் பகுதிகளில் நடத்தப்பட்டது.


                         ''போதை பொருட்கள் தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம்'' கிராமவாழ் மரியாதைக்குரிய பெரியோர்களின் விவாதம் காணீர்.

 பெரியோர்களின் விவாதம் நிறைவாக நமக்கு ஒத்துழைப்பு அருளிய காட்சி.






     வாகன பிரச்சாரத்திற்கு நாள் முழுவதும் ஒத்துழைப்பு கொடுத்த இளைஞர் திரு.ஜெகன் அவர்கள்.





            திருமிகு.P.S.பெரியசாமி அவர்கள்-ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் &பிரிண்டிங்ஸ் கோபி மற்றும் செயற்குழு உறுப்பினர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள்.அவரது வாகனத்துடன்.






       திருமிகு.S.P.பழனிச்சாமி அவர்கள் (உடற்கல்வி ஆசிரியர்) 
               இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு ஆளாக காரணம் பெற்றோரே! குடும்ப நலனுக்காக ஒன்று மட்டும் போதும் என்று குழந்தைப்பேற்றை கட்டுப்படுத்திக்கொள்ளும் இந்த சமூகம் ஒரே பிள்ளை என்று அளவு கடந்த பாசம் கொடுப்பது.அதன் விளைவாக இளையோர் அறியாமை காரணமாக செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுவது.பிறர் கண்காணித்து முறையிட்டால் அதெல்லாம் அவர்கள் வயது முதிர்வு பெற்றால் சரியாகிவிடுவர் என்று ஆதரவு கொடுப்பது. என கடுமையாக சாடுகிறார்.






என அன்பன் 
 பரமேஸ்வரன்.சி,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

Saturday, 5 October 2013

நிறைவு விழா-அழைப்பிதழ்-கோபி கலை அறிவியல் கல்லூரி.

               
Dispense drugs - and save ourselves
        
மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.
            நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;26/2013 வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்'' தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நிறைவு விழா-

                   கோபி கலை அறிவியல் கல்லூரியில் வருகிற அக்டோபர் 08ம் தேதி மதியம் 02-30மணிக்கு K.M.R.நினைவு அரங்கத்தில் நடைபெற உள்ளது.அது சமயம் அனைவரும் வருக என அன்புடன் அழைக்கிறோம்.

 
''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''
           விழிப்புணர்வு நோட்டீஸ் காண்க.
  என 
அன்பன் 
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்:26/2013
    E-MAIL // consumerandroad@gmail.com

Friday, 4 October 2013

ஆசனூர்- அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,

                                          வணக்கம்.
         

              தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா  ''போதை பொருட்களை தவிர்ப்போம் -நம்மை நாமே காப்போம்''-ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நான்காம் நாள் இன்று 
                தாளவாடி ஒன்றியம் ,ஆசனூர்-அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் போதை பொருட்களை தவிர்ப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்-

       தலைமையுரை;- 
    திருமதி;R.கலைவாணி.அவர்கள்,
               தலைமை ஆசிரியை.
   அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-ஆசனூர்.
               (தாளவாடி ஒன்றியம்)


வரவேற்புரை மற்றும் விளக்கவுரை;
             திரு.ரமேஷ் அவர்கள்,
                உடற்கல்வி ஆசிரியர்,
          அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-
                                   ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)


முன்னிலை மற்றும் சிறப்புரை;
                         திருஇரா.ஈஸ்வரன் அவர்கள்,
 நிலைய அலுவலர்-தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை-
               போக்குவரத்து,ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்) 
       

 விழிப்புரை;
          திரு.A.P.ராஜூ அவர்கள்,செயற்குழு உறுப்பினர்,
 நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
                     பதிவு எண்;-26/2013
   

வாழ்த்துரை;
        திரு.பிரான்சிஸ் ரிச்சர்டு பிரபு,அவர்கள்,
           முதுநிலை பட்டதாரி ஆசிரியர்,
   அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி-
            ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)

  நன்றியுரை; 
                   திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
                                               செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
                    தமிழ்நாடு.

                     பதிவு எண்;-26/2013.
  கருத்தரங்கத்தில்  திரு.ஜேசுதாஸ்-அவர்கள்,முன்னிலை தீயணைப்பாளர்,திரு,பூபதி அவர்கள்,தீயணைப்பு வீரர்.மற்றும்ஊர் மக்கள் உட்பட பள்ளி மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.





ஆசனூர் வட்டாரத்தில் ''போதை தவிர்ப்போம்'' விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.அப்போது கதவு ஒட்டியும்,துண்டு பரசுரமும் வழங்கப்பட்டது. 
        என 
       அன்பன்
பரமேஸ்வரன்.C.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்26/2013.
E-Mail // consumerandroad@gmail.com

Thursday, 3 October 2013

ஸ்ரீராகவேந்திரா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்-03-10-2013


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம். 
                                ""போதை பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''விழிப்புணர்வு இயக்கத்தின்  மூன்றாவது நாள் இன்று
  
         


                     ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி-சத்தியமங்கலம், மாணவ,மாணவியர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ள காட்சி.




            திரு.M.R.முகுந்தன் B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II  மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சத்தியமங்கலம்,அவர்கள்,பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.திரு.தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்கள் மற்றும்,அரிமா K.லோகநாதன்  அவர்கள் (லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்) ஒருங்கிணைப்பாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண்:26/2013- முன்னிலை வகித்தனர்.






         திரு.A.A.இராமசாமி அவர்கள்,தலைவர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண்26/2013,
   பள்ளி மாணவர்கள் பேரணிக்கு பாதுகாப்பாக வருகை தரும் காட்சி.

               சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பாலத்தில் மாணவர்கள் பேரணி  கடந்து வரும் காட்சி.


                 சத்தியமங்கலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் மாணவர்கள் பேரணி கடந்து வரும் காட்சி.









               சத்தியமங்கலம் வட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் பேரணி கடந்து வரும் காட்சி.

              சத்தியமங்கலத்தில்  கோபி ரோடு &கோயமுத்தூர் ரோடு சந்திப்பு அருகில் மாணவர் பேரணி காண்க.
           லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் முன் கடந்து செல்லும்
  மாணவர் பேரணி.






           சத்தி-ரங்கசமுத்திரம், நகராட்சி உயர்நிலை பள்ளியில் பேரணி நிறைவு பெற்ற காட்சி.
 இன்னும் தொடரும்.....
              (நாளை ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் போதை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கும்)

 என அன்பன்,
பரமேஸ்வரன்.சி,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
E MAIL// consumerandroad@gmail.com