Tuesday, 21 May 2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

            ''நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு'' 
            வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
             தகவல் அறியும் உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவின் படி அடிப்படையான மனித உரிமையாகும்.மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கிடைக்கப்பெற்ற மாபெரும் ஆயுதம் ஆகும்.தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 நமக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் ஆகும்.
      
    தற்போது உள்ள தகவல் அறியும் சட்டத்திற்கான அடிப்படைக் காரணமானவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான (1)திருமிகு.அருணாராய் ,I.A.S.அவர்கள்,(2)திருமிகு.சங்கர்சிங்,அவர்கள் (3)திருமிகு.நிகில்தேவ் அவர்கள்(அமெரிக்காவில் மேலாண்மைப் பட்டப்படிப்பு பயின்று வந்த இவர் சமூக ஆர்வத்தின் காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வந்து சமூகப்பணி ஆற்றியவர்) இந்த மூவரும் இணைந்து ராஜஸ்தான் மாநிலம் ''தென்துங்கரி'' என்னும் குக்கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லாத அல்லது மிகக்குறைந்த குக்கிராமமான ''தென்துங்கரி'' யில் மக்களோடு மக்களாக சிறு குடிசை போட்டு வாழ்ந்து அவர்களது வாழ்க்கைச்சூழலை அதாவது  கிராம மக்களின் கஷ்டங்களை உணர்ந்தனர்.அக்கிராமத்தில் மின்சாரம் இல்லை,குடிநீர் இல்லை,சரியான உணவு இல்லை,சாலை வசதி மற்றும் வாகன வசதி இல்லை,தொலைபேசி இல்லை,மருத்துவ வசதி இல்லை,கடும் வறட்சி நிலவியது,பண்படுத்தபடாத நிலம்,சமூகப்பாதுகாப்பு இல்லை,கல்வியறிவு மிகக்குறைவு,கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கித்தவிப்பு,கடன் மற்றும் வறுமை காரணமாக தற்கொலைகள் அதிகம் மக்கள் பிழைக்க வழி இல்லை என்ற நிலை. அதன் விளைவாக ''மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன்'' அதாவது ''விவசாய தொழிலாளர்கள் சங்கம்''என்ற சங்கத்தினை நிறுவி தங்களது உரிமைகளை கேட்க விழிப்படையச்செய்தனர்.மக்களும் -அரசு எதற்கு இருக்கிறது?அரசின் பொறுப்பு என்ன? கிராம பகுதிகளில் செயல்பாடு முடக்கம் ஏன்?குடிமக்கள் உரிமைகள் என்ன?கிராம நலத்திட்டங்கள் ஏன் கிடைப்பதில்லை?என பல கூட்டங்களைக்கூட்டி பொதுவாக விவாதித்தனர்.எல்லாக் கேள்விகளுக்கும் தங்களிடமே விடை இருப்பதை உணர்ந்தனர்.''ஜன் சன்வாய்'' என்னும் பொது விசாரணைகள நடத்த ''மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன்''அமைப்பு ஏற்பாடு செய்தது.இந்த பொது விசாரணைகள் மக்களை மேலும் விழிப்படையச்செய்தது.அரசு அதிகாரிகளை பொதுவிசாரணைகளில் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். பொதுவிசாரணைகளை சந்திக்க அரசு அதிகாரிகளும்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் படாதபாடு பட்டனர்.சங்கத்தின் வலிமை பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.இவ்வாறாக வலுப்பெற்ற சங்கத்தின் பொதுவிசாரணை என்னும் செயல்பாடு மாநில அளவில்  1994-ஆம் ஆண்டு நல்ல வரவேற்பினை பெற்றது.மக்களும் அரசின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.அரசு நிர்வாகத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இருந்த நிலை மாறி அரசு நிர்வாகத்தில் மக்கள் நேரிடையாகத் தலையிடும் உரிமையாக மாறியது.அனைத்து மட்டங்களிலும் மாநில அளவில் சங்கம் அங்கீகாரம் பெற்றது.ஆட்சி அதிகாரத்தை சுவைக்கப் பழகிவிட்ட அதிகாரிகளும்,ஆட்சியாளர்களும் தாங்கள் செய்து வரும் முறைகேடுகளும்,சுரண்டல் நடவடிக்கைகளும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்று அடக்கிவைத்த நிலை மாறி கவனமுடனும் பொறுப்புடனும் செயல்பட வைத்தது.

          தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 டிசம்பர் மாதம் 2004-ஆம் ஆண்டில் நமது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.11-05-2005 ஆம் ஆண்டில் மக்களவையிலும்,அடுத்த நாளான 12-05-2005 ஆம்ஆண்டில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது..15-ஜூன் மாதம்-2005 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெற்றது.21ஜூன் மாதம் 2005ஆம் ஆண்டில் அரசு பதிவிதழில் வெளியிடப்பட்டது. 12அக்டோபர் மாதம் 2005ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு இந்திய குடி மகனும் ,குடிமகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள் ஆவார்கள்.இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் 68-நாடுகளில் நடைமுறையில் உள்ளது.அகில உலக அளவில் சுவீடன் நாடுதான்1766-இல் முதன்முதலாக தகவல் அறியும் சட்டத்தை அமல்படுத்தியது.தென் ஆப்பிரிக்கா குடியரசில்தான் 2000-ஆவது ஆண்டில் அனைத்து தகவல்களையும் அரசுத்துறைகள் மட்டும் இன்றி தனியார் துறைகளும்,தனியார் அமைப்புகளும் மக்களுக்கு தகவல்களைக்கொடுக்க வேண்டிய பொறுப்புகளுக்குஆளாக்கப்பட்டன.

     தகவல் தொகுப்பு;- 
                                                           


               
 

No comments:

Post a Comment