Sunday, 21 April 2013

நார்ச்சத்துக்களின் பயன்கள் என்ன?

 அன்புள்ள நண்பர்களே,
               வணக்கம்.
     நுகர்வோர் நலன் மற்றும் சாலைப்பாதுகாப்பு இயக்கம் -
              (consumer welfare and road safety organisation-tamil nadu ) 
              வலைப்பக்கத்திற்கு பார்வையிட தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த இடுகையில் நார்ச்சத்துகள் பற்றி சிறிது காண்போம்.
                  நார்ச்சத்துக்கள் இருவகைப்படும்.அவை
  (1)நீரில் கரையும் நார்ச்சத்துக்கள்
  (2) நீரில் கரையாத நார்ச்சத்துக்கள்
              (1)  நீரில் கரையும் நார்ச்சத்துக்கள் (soluble fiber) இரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைத்து இரத்தத்தின் பிசுபிசுப்புத்தன்மையை தடுக்கிறது. இதனால் இரத்தக்குழாய் அடைப்பு ஏற்படாமல் சீரான ரத்த ஓட்டம் நடைபெறும்.இதனால் இரத்த அழுத்த வியாதி வராது.இதய நோய் வராது. இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

                (2)  நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் (Insoluble fiber ) குடலினுள் அதிக நீரை கிரகித்து செரிமான மண்டலத்தின் வேலையை எளிதாக்கி உணவின் செரிமானத்தைத் தூண்டுகின்றன.மலச்சிக்கல் வராமல் தடுக்கின்றன.
              இரைப்பை மற்றும் சிறுகுடல் பகுதியில் உள்ள கார்போஹைட்ரேட் சத்து குளுகோஸாக மாற்றும் வேகத்தைக் குறைக்கின்றன. இதனால் உடலில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை சேர்வது குறைக்கப்படுகின்றன.மேலும்,
              பித்த உப்புகள் (Bile salt) கொழுப்பு போன்றவற்றை உட்கிரகிக்கவிடாமல் தடுக்கின்றன.இதனால் அஜீரணக் கோளாறு மற்றும் குடல் புண் உருவாகாமல் தடுக்கப்படுகின்றன.
               நீரில் கரையாத நார்கள் அதிக அளவு நீரை உட்கிரகிப்பதால் தேவையற்ற நச்சுப்பொருட்களை எளிதாக மலத்துடன் வெளியேற்றுகின்றன.
                 ஜீரண மாற்றங்கள் அதாவது  மாவுப்பொருட்கள் சர்க்கரையாக மாற்றப்பட்டு பிறகு அது புரதம்,அமினோ அமிலங்கள்,கொழுப்பு அமிலம்,கிளிசராக மாற்றம் அடைகின்றன. இத்தகைய மாற்றத்தை சீராக செயலாற்ற உதவுகின்றன.

               சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரித்தேவை 28கிராமிலிருந்து 35 கிராம் வரை நார்ச்சத்துகள் தேவைப்படுகின்றன.
            நார்ச்சத்துகள் உள்ள உணவுப்பொருட்கள்;- 
    தீட்டப்படாத அரிசி,கோதுமை,பார்லி,கீரைகள்,பழங்கள்,பசுமையான காய்கறிகள்,பச்சை கேரட்,கடலை,பட்டாணி,ஆப்பிள்,ஆரஞ்சு,கொட்டையில்லாத சாறு உள்ள பழங்கள்,பேரீக்காய்,அத்திப்பழம்,கொடிமுந்திரி,வெள்ளரி,வெங்காயம்,தக்காளி இவைகளில் நார்ச்சத்துகள் உள்ளன.

பதிவேற்றம்
  C.பரமேஸ்வரன்- அரசுப் பேருந்து ஓட்டுநர் 
  தாளவாடி - ஈரோடு மாவட்டம்.

No comments:

Post a Comment