சங்கப் பேரவைக் கூட்டம்
நாள்;2015மே மாதம்24ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00மணி.
இடம்;SRN மெட்ரிக் பள்ளி (நீதிமன்றம் அருகில்)
சத்தியமங்கலம்-638402,ஈரோடு மாவட்டம்.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்- தமிழ்நாடு
(பதிவு எண் 26/2013) அரசு பதிவு பெற்ற தன்னார்வ சமூக நல அமைப்பு உறுப்பினர்களுக்கு அன்பான அழைப்பு,
நேரிலும்,தபால் மூலமாகவும்,மின்னஞ்சல் வாயிலாகவும், தகவல் கிடைக்காத அன்பர்கள் இதனையே நேரில் அழைத்த விண்ணப்பமாக கருதி வாங்க.........
அரசியல்,சாதி,மதம்,இனம் ,மொழி வேறுபாடின்றி மனித சமூகத்திற்காக,
கடந்த 2010 ஆம் ஆண்டு கற்கும் பாரதம் கல்விப் பிரச்சாரத்தில் தொடங்கி மக்கள் நலனுக்காக செயல்பட்ட நாம்
முதலில் தேனீக்கள் தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் அரசு பதிவு பெற்று சமூகநலனுக்கான பல்வேறு தளங்களில் மலைப்பகுதி மக்களுக்காகவும்,இளைய சமூகத்திற்காகவும்,செய்து வந்தோம்.
பிறகு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு மாவட்டத்தில் இணைந்து கல்வி மற்றும் பயனுள்ள நல்ல பணிகளை செய்து வந்தோம்.
அதன்பிறகு தற்போது
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு என்ற பெயரில் புதிய அமைப்பினை துவங்கி இரண்டாவது ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது .
ஆண்டுதோறும் தவறாமல் நம்ம சங்கத்தினை புதுப்பித்துக்கொண்டும் வருகிறோம்.
இந்த அமைப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகளில் அரசியல்,சாதி,மத,இன,மொழி வேறுபாடு இல்லாமல் மனித சமூகம் என்ற நோக்கத்தில் நாம் மாநில அளவில் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும்,பொது இடங்களிலும்,மருத்துவ முகாம்,கண் சிகிச்சை முகாம்,போன்ற பல சேவைகளை மக்களுக்கு பயன் தரும் வண்ணம் முழுக்க நம்முடைய நிதியினை பங்களித்து யாரிடமும் நிதி பெறாமல் செய்து வருகிறோம்.
குறிப்பாக நமது சங்கம் சார்பாக,
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம்,தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்,வாசிப்புத்திறனை அதிகரிக்கும் வகையில் புத்தக கண்காட்சிகள்,புகைத்தல் மற்றும் போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றிய விழிப்புரை பிரச்சாரம்,மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு இயக்கம்,கல்வி வழிகாட்டுதல் இயக்கம்,கலாச்சார சீர்கேடும் மீளுவதும் பற்றிய இயக்கங்கள்,குழந்தைகள் பாதுகாப்போம் விழிப்புணர்வு இயக்கம்,பிளாஸ்டிக் தீங்குகள் மற்றும் வன வளம் பாதுகாப்பு இயக்கம் என பல்வேறு இயக்கங்கள் செய்து வருகிறோம்
http://consumerandroad.blogspot.com என்ற இந்த வலைப்பக்கத்தில் ஆரம்பம் முதல் பார்வையிட்டாலே தங்களுக்கு நமது பணிகளின் தன்மை புரியும்.
இந்த ஆண்டு இதுவரை செய்த வேலைகள் மற்றும் சமூக நலப்பணிகள் பற்றியும்,செலவு விவரங்கள்,நமக்கு தாமாக முன்வந்து உறுதுணையாக இருப்பவர்கள் பற்றியும் ,இனி வருங்காலங்களில் நம்ம சங்கம் செயல்பாடு பற்றியும், நிதி மற்றும் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது பற்றியும்,புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முறை பற்றியும் விவாதிப்பது மற்றும் சங்கத்தின் ஆண்டறிக்கை சமர்ப்பிக்க உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேரவைக்கூட்டத்திற்கு வருகை புரியும் உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தவோ,பாராட்டவோ கூடாது.
நமது சேவைப்பணியிலுள்ள குறைகளையும்,தவறுகளையும்,தக்க ஆலோசனைகளையும்,வழிகாட்டுதல்களையும் மட்டுமே வழங்க வேண்டும்.
செயலாளராகிய எனது பங்களிப்பினைப் பொறுத்தவரை ,உறுப்பினராகிய தாங்கள் ஒரு ரூபாய் செலுத்தி இருந்தாலும் அனைத்து தகவல்களையும் கேட்டறிய உரிமையுள்ளவர்களே. உங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது எனது கடமையும்,பொறுப்பும் ஆகும்.என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்க..
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி விவரம் தெரிந்துகொள்ள உடனே தொடர்பு கொள்ளுங்க..
(1)தலைவர் A.A.இராமசாமி- 9486708475
(2)துணை தலைவர் S.ரவி - 9442436165
(3)செயலாளர் C.பரமேஸ்வரன் - 9585600733
(4)துணை செயலாளர் V. ராஜன் - 9786285405
(5) V.பாலமுருகன் - 9442819031
என அன்பன்
C.பரமேஸ்வரன்.
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
Face Book / parameswaran driver